குடியரசு தின விழாவில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் இந்திய திருநாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் திருவுருவங்களை தாங்கிய அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டது.
"செக்கிழுத்த செம்மல்" வ.உ.சிதம்பரனார் மற்றும் "பகுத்தறிவு பகலவன்" தந்தை பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் திருவுருவங்கள் தாங்கிய இரண்டு அலங்கார ஊர்திகள் கரூர் மாவட்டத்திற்கு வந்தது. கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்தில் மங்கள வாத்தியம் முழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சார்பில் மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் அலங்கார ஊர்திகள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் பொதுமக்கள், பள்ளி-கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் பார்வையிடுவதற்காக இன்றும், நாளையும் காட்சிப்படுத்தப்படும். கரூர் திருவள்ளூர் மைதானத்திற்கு வந்த அலங்கார ஊர்தியை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பார்வையிட்டு செல்பி எடுத்துக்கொண்டார். இதேபோல் பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு செல்பி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து பரத நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.