• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 62 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி எழுதிய ஆய்வுக்குறிப்பு - ட்விட்டரில் பதிவிட்டு நெகிழ்ந்த கரூர் கலெக்டர்!

62 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி எழுதிய ஆய்வுக்குறிப்பு - ட்விட்டரில் பதிவிட்டு நெகிழ்ந்த கரூர் கலெக்டர்!

கருணாநிதி எழுதிய ஆய்வுக்குறிப்பு

கருணாநிதி எழுதிய ஆய்வுக்குறிப்பு

”வேங்காப்பட்டி என்ற கிராமத்தில் கலெக்டராக எனது முதல் ஆய்வின் போது இந்த புதையலை கண்டேன்.”

  • Share this:
    கரூர் மாவட்டம் வேங்காப்பட்டி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 62 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ஆய்வுக்குறிப்பைப் பார்த்து நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் டி குணாளன்.

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வேங்காப்பட்டியில் தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் டி குணாளன் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். வழக்கமாக ஆய்வு மேற்கொண்டப் பிறகு அதிகாரிகள், தங்களது ஆய்வுக்குறிப்பை எழுத வேண்டும். அந்த வகையில் ஆச்சர்யமான ஒரு விஷயம் ஆட்சியரின் கண்களில் பட்டிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முன்னாள் முதல்வர் கருணாநிதி 1957-ம் ஆண்டு முதன் முதலில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டு வென்றது குளித்தலை தொகுதியில் தான். தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ.தர்மலிங்கத்தை அவர் வீழ்த்தியிருந்தார். அதன் பிறகு தான் போட்டியிட்ட எந்த சட்டமன்ற தேர்தலிலும் தோற்காதவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.



    இது ஒருபுறமிருக்க, 1959-ம் ஆண்டு குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக வேங்காப்பட்டி பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கருணாநிதி, தனது ஆய்வுக்குறிப்பை அங்கே தன் கை பட எழுதியிருக்கிறார். அதில், “இன்று வேங்காப்பட்டி பள்ளியை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 108-ல் இன்று பள்ளிக்கு வருகை தந்திருந்தவர்கள் 31 பேர். இந்தப் பள்ளியில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தின் மேல் மரங்கள் விழுந்திருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதாக பொதுமக்கள் நன்கு பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் நன்கு கவனிக்கப்படுதல் நன்று” என்று எழுதியிருந்தார்.

    இதைப்பார்த்த மாவட்ட ஆட்சியர் அதனை படமெடுத்து ட்விட்டரில் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்திருக்கிறார். ”வேங்காப்பட்டி என்ற கிராமத்தில் கலெக்டராக எனது முதல் ஆய்வின் போது இந்த புதையலை கண்டேன். 1959-ஆம் ஆண்டு குளித்தலை எம்.எல்.ஏ.வாக இருந்த கலைஞர் எழுதிய ஆய்வுக்குறிப்பு இது” என அதில் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: