• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பட்டியலின மக்களின் மயானத்துக்கு போராடி உயிரிழப்பு: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல்!

பட்டியலின மக்களின் மயானத்துக்கு போராடி உயிரிழப்பு: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல்!

மாவட்ட ஆட்சியர் ஆறுதல்

மாவட்ட ஆட்சியர் ஆறுதல்

உயிரிழந்த வேலுச்சாமியின் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆறுதல் தெரிவித்து நிதியுதவிகளை வழங்கினார்.

  • Share this:
    பட்டியலின மக்களின் மயானத்துக்கு பாதை கேட்டு போராட்டம் நடத்தியவர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு உதவிகளும் வழங்கினார்.

    கரூர் மாவட்டம், நெரூர் தென்பாகம்  அருகேயுள்ள வேடிச்சிபாளையத்தில் பட்டியலின மக்களுக்கு சொந்தமான மாயனம் உள்ளது.  இந்த மயானத்துக்கு செல்லும் பாதையை சிலர் மறித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் மயான பாதை ஆக்கிரமிப்பை  கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வேலுச்சாமி என்பவர் மயக்கமடைந்து மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், உயிரிழந்த வேலுச்சாமியின் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆறுதல் தெரிவித்து ஈம சடங்கு நிதி ரூ.22,500 மற்றும் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் மற்றும் ஆதரவற்றோர் விதவைச் சான்று மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை ரூ.1000 பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை பாதிக்கப்பட்ட வேலுச்சாமியின் மனைவி மணிமேகலையிடம் வழங்கினார்.


    இதையும் படிங்க: கொட்டும் மழையில் போக்குவரத்தை சரி செய்த பெண் காவலர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!


    மேலும் உயிரிழந்த வேலுச்சாமியின் மூத்த மகன் சந்தோஷ் ( 19 ) . பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இன்னொரு மகன் சாரதி வயது 13, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இருவரின் கல்வி மேற்படிப்புக்கு  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்உதவிகள்  வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்து உறுதியளித்தார்.

    மேலும் படிக்க: கோவில் அருகே கட்சிக்கொடி கம்பம்: இரு சமுதாயத்தினர் இடையே பதற்றம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: