10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை என மோசடி SMS: 6 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!

போலீசார்

விவசாயி கண்ணையன் என்பவருக்கு கடந்த 2014ம் ஆண்டு ஆன்லைன் வழியே 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை விழுந்ததாக போன் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது.

  • Share this:
    SMS மோசடியில்  தொடர்புடைய ஆசாமிகளை கரூர் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக டெல்லியில்  கைது செய்துள்ளனர்.

    கரூர் வெங்கமேடு சின்னகுளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணையன் (54) என்பவருக்கு கடந்த 2014ம் ஆண்டு ஆன்லைன் வழியே 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை விழுந்ததாக போன் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது.
    பரிசுத் தொகையை பெறுவதற்கு முன்பாக வருமான வரித்துறைக்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறி 9.20 லட்சம் ரூபாயை எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்கிற்கு வெங்கமேடு லட்சுமி விலாஸ் வங்கி கிளை  மூலமாக டெல்லியை சேர்ந்த  நஜார்(26) வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார் கண்ணையன்.

    Also Read:  மளிகைக் கடையில் 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி திடீர் மரணம்… உடல் முழுதும் நீல நிறமானதால் அதிர்ச்சி!

    சில நாட்களில் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர்கள் கண்ணையனிடமிருந்து தொடர்பைத் துண்டித்து உள்ளனர். சந்தேகமடைந்த கண்ணையன் இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப் பிரிவில் கடந்த 2014ஆம் ஆண்டு புகார் அளித்துள்ளார். கடந்த 6 வருடங்களாக இந்த வழக்கில் போதிய முன்னேற்றம் இல்லாமல் இருந்துள்ளது.

    இந்த நிலையில் வழக்கை விசாரணை செய்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்தது. சென்னை காவல்துறை சிபிசிஐடி இயக்குனர் உத்தரவின்பேரில் இதுதொடர்பாக கரூர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திலகாதேவி தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி சென்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்துள்ளனர்.

    Also Read:  குதிரன் சுரங்கப்பாதை: தென்னிந்தியாவின் நீளமான குகைப்பாலம் எப்படி இருக்கு? - ஒரு நேரடி ரிப்போர்ட்!

    விசாரணையில்  விவசாயி கண்ணையன் செலுத்திய வங்கி கணக்குகளை கொண்டு ஆய்வு செய்ததில் டெல்லி ரயில்வே ரோடு, ஆசாத்புர்,  பப்பு பால் கடை தெருவைச் சேர்ந்த முன்வர் நஜார்(26) சொகில்  அன்சாரி(24), மகேஷ்(29) ஆகிய மூன்று நபர்களையும் கடந்த ஜூலை 30ஆம் தேதி குற்றவாளிகள் என்று உறுதி செய்து கைது செய்தனர்.

    குற்றவாளிகள்


    பின்னர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விமானம் மூலம் 3 குற்றவாளிகள் திருச்சி அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து ஆய்வாளர் திலகாதேவி தலைமையிலான போலீசார் 3 நபர்களையும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2ல் நீதிபதி ஆர்.சுஜதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் மூவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து குற்றவாளிகள் மூவரும் குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தி.கார்த்திகேயன், செய்தியாளர் - கரூர்
    Published by:Arun
    First published: