Home /News /tamil-nadu /

கரூரில் விநாயகர் சிலைக்காக போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது

கரூரில் விநாயகர் சிலைக்காக போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது

கரூர் செய்தி

கரூர் செய்தி

Karur BJP | வேலாயுதம்பாளையம் பகுதியில் விநாயகர் சிலை வைப்பதில் வாக்குவாதம் - போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியை காவல்துறை உதவி ஆய்வாளர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு. சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. 

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள அண்ணாநகரில் விநாயகர் சிலை ஒன்றை வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விநாயகர் சிலை இருந்த பக்கத்து வீட்டுக்காரர் வேலாயுதம்பாளையம் போலீஸ் மற்றும் புகளூர் தாசில்தாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி புகளூர் தாசில்தார் மதிவாணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சிலையை அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாஜக கட்சியினர் விநாயகர் சிலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு வேலாயுதம்பாளையம் - புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இங்கிருந்து எடுக்கப்பட்ட விநாயகர் சிலையை இருந்த இடத்தில் வைத்தால் மட்டுமே சாலை மறியலை கைவிட ப்படும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததில் மூதாட்டி ஒருவரை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



    இருப்பினும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாலைமறியலில் ஈடுபட்டதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த தலித் பாண்டியன், புகழூர் நகராட்சி பாஜக கவுன்சிலர் சுரேஷ் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    ALSO READ |  டீசல் திருட்டு கும்பல் அட்டூழியம் ... தட்டிக்கேட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்
     சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.




    உடனடியாக அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கிக் கொண்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    தி.கார்த்திகேயன்,செய்தியாளர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: BJP, Karur

    அடுத்த செய்தி