கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில்ஆர். இளங்கோவும், அதிமுக கூட்டணி சார்பில்
பாஜகவின் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பே அரவக்குறிச்சி தொகுதியை குறிவைத்து பல்வேறு பணிகளை அண்ணாமலை செய்து வந்துள்ளார்.
'அரவக்குறிச்சி தொகுதியில் புதிதாக 100 குளங்கள் வெட்டி தண்ணீர் நிரப்பப்படும். 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு, வீடு இல்லா குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும்.சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, முருங்கை வாரியம் அமைக்கப்படும் என அரவக்குறிச்சி தொகுதிக்காக தனி செயல் திட்ட அறிக்கையைவே அவர் வெளியிட்டிருந்தார்.
அவரது பிரச்சாரத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் இடையே எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், தேர்தலில் பதிவாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. - தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் ஆர். இளங்கோ 2717 வாக்குகளும்,
பாஜக வேட்பாளர் அண்ணாமலை 2517 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.