கையும் களவுமாக சிக்கிய நில அளவையர்.. கூட்டுப் பட்டாவை தனி பட்டாவாக மாற்றித் தர லஞ்சம்...
கையும் களவுமாக சிக்கிய நில அளவையர்.. கூட்டுப் பட்டாவை தனி பட்டாவாக மாற்றித் தர லஞ்சம்...
கையும் களவுமாக அகப்பட்ட நில அளவையர்
Karur District | கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட்டுப் பட்டாவை தனி பட்டவாக மாற்றியமைப்பதற்கான பணியை விரைந்து முடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு நில அளவையர் ரவி 8,000 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
கரூரில் கூட்டுப் பட்டாவை தனிப் பட்டாவாக மாற்றி தருவதற்காக 5,000 லஞ்சம் பெற்ற நில அளவையர் ரவியை கரூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற ரவி (38) என்பவர் தோரணக்கல்பட்டி வருவாய் கிராம பகுதிகளுக்கு நில அளவையராக பணிபுரிந்து வந்தார். கரூர் மாநகரம் எல்.வி.பி நகரை சேர்ந்த சரவணன் என்பவர் தனது தாயார் புஷ்பராணி பெயரில் தோரணக்கல்பட்டி வருவாய் கிராமத்தைச் சேர்ந்த ராயனூர் பகுதியில் இருக்கும் கூட்டு பட்டாவை தனித் தனி பட்டாவாக கேட்டு நில அளவையர் ரவியிடம் 6 மாதத்திற்கு முன்பு விண்ணப்பித்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட்டுப் பட்டாவை தனி பட்டவாக மாற்றியமைப்பதற்கான பணியை விரைந்து முடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு நில அளவையர் ரவி 8,000 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இறுதியில் 5,000 ரூபாய் தருவதாக முடிவு செய்யப்பட்ட பின்பு சரவணன் 5,000 ரூபாயை லஞ்சமாக கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது மறைந்திருந்த கரூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக நில அளவையர் ரவியை பிடித்தனர். இதில் கரூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி நடராஜன், ஆய்வாளர் சாமிநாதன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.கார்த்திகேயன்,செய்தியாளர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.