Home /News /tamil-nadu /

தனிப்படை அமைத்து 120 செல்போன்களை மீட்ட போலீசார்: உரியவர்களிடம் ஒப்படைப்பு

தனிப்படை அமைத்து 120 செல்போன்களை மீட்ட போலீசார்: உரியவர்களிடம் ஒப்படைப்பு

செல்போன் மீட்பு

செல்போன் மீட்பு

கரூர் மாவட்டத்தில் செல்போன்கள் அதிகளவு களவு போனதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இதில் ரூ.24 லட்சம் மதிப்பிலான120 செல்போன்கள் மீட்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கரூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.24 லட்சம் மதிப்பிலான 120 செல்போன்கள் தனிப்படை அமைத்து காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மீட்கப்பட்ட செல்போன்கள்  உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    கரூர் மாவட்டத்தி செல்போன் திருட்டு அதிகரித்தது. இதையடுத்து காவல்  கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மாவட்டத்தின் எல்லைக்குள் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்காக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் சைபர் கிரைம் போலீசார் ஆய்வாளர் அம்சவேணி தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 120 செல்போன்கள் கண்டறியப்பட்டது. இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

    இதையும் படிங்க: வேகமெடுக்கும் கொரோனா: குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரில் 67 பேருக்கு தொற்று உறுதி

    செல்போன்களை பெற்றுக்கொண்ட உரிமையாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். அப்போது காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், செல்போன்களை பாதுகாப்பாக எடுத்துச்செல்வது குறித்தும், காணாமல் போன செல்போன் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிப்பது குறித்தும் விளக்கி பேசினார்.

    செய்தியாளர்: கார்த்திகேயன், கரூர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Police, Theft

    அடுத்த செய்தி