ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பலே கில்லாடி.. மனைவிக்கு தெரியாமல் பெற்றோர் உதவியுடன் இரண்டு திருமணம் செய்த நபர்!

பலே கில்லாடி.. மனைவிக்கு தெரியாமல் பெற்றோர் உதவியுடன் இரண்டு திருமணம் செய்த நபர்!

கரூர்

கரூர்

கரூரில் மனைவியை ஏமாற்றி பெற்றோர் உதவியுடன் இரண்டு திருமணம் செய்த பலே கில்லாடி ஆசாமியை கைது செய்த காவல்துறையினர் உடந்தையாக இருந்த பெற்றோரை தேடி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பெண்களை கவர்வதில் கில்லாடியாக இருந்த தனியார் வங்கியின் பணியாளர் ஒருவர் பெற்றோர் உதவியுடன் 3 திருமணங்கள் செய்து நகை மற்றும் பணம் பறித்து ஜாலியாக சுற்றிய நிலையில் முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  பொள்ளாச்சி  வாழைக்கொம்பு , பகுதியைச் சேர்ந்த   சதாசிவத்தின் மகள் ஜோதிமுருகேஸ்வரி. கடந்த 28.07.2021 ம் தேதி, கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், தனக்கு கடந்த 30.01.2012 ம் தேதி கரூர் மாவட்டம் வெங்கமேடு VVG நகரைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பாலசுப்பரமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றதாகவும் , திருமணத்திற்கு பின்பு தன் கணவர் மற்றும் அவரின் பெற்றோருடன் மேற்படி முகவரியில் வசித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

  Also Read:  பாஜக எம்.எல்.ஏவை தெருவில் தேங்கியிருக்கும் கழிவு நீரில் நடக்க வைத்த தொகுதி மக்கள்!

  பிரசவத்திற்காக ஜோதிமுருகேஸ்வரி தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் , 01.01.2013 ம் தேதியன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது , குழந்தையுடன் 3 மாதங்கள் கழித்து ஜோதிமுருகேஸ்வரி கரூர் வந்த போது அவரது கணவர் பாலசுப்பரமணி, நித்யா என்ற பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தது  ஜோதிமுருகேஸ்வரிக்கு தெரியவந்துள்ளது.

  இது தொடர்பாக தனது கணவர் மற்றும் அவரது பெற்றோரை கேட்டபோது அவன் அப்படித்தான இருப்பான் என்று சொல்லி பாலசுப்பிரமணியனின் பெற்றோர் துன்புறுத்தியதால் தனது பெற்றோர் வீட்டிற்கு மீண்டும் சென்றுவிட்டார்.

  அதன் பின்பு தகாத உறவு வைத்த பெண்ணான நித்யாவை என்னிடம் இருந்து விவாகரத்து பெறாமலும் எனது கணவர் பாலசுப்பரமணி அவரின் பெற்றோர் மற்றும் சகோதரிகளின் உதவியுடன் கடந்த 2017 நவம்பரில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் , அதன் பின்பு அவர்களுக்கும் தெரியாமல் சுதா என்ற பெண்ணை கடந்த 2020 ஜனவரியில் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் கொடுத்த கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஜோதி முருகேஸ்வரி புகார் அளித்திருக்கிறார்.

  Also Read:   தண்ணீரை பளபளப்பான தங்கம் போன்ற உலோகமாக மாற்றிய ஆராய்ச்சியாளர்கள்: இது எப்படி சாத்தியம்?

  இதன் அடிப்படையில் பாலசுப்பரமணி, அவரின் பெற்றோர்கள் மற்றும் அவரின் இரண்டாவது மனைவி நித்யா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடி வந்தனர்.

  இந்நிலையில்  29.07.2021 ம் தேதி பாலசுப்பிரமணியை கைது செய்து நீதிமன்ற காவல் சிறையில் அடைத்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்த புகாரை விசாரித்தபோது,  பாலசுப்பிரமணிக்கு அவருடைய  பெற்றோர்கள், பணம் மற்றும் நகைகளுக்கு ஆசைப்பட்டு மூன்று திருமணங்கள் நடத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் பாலசுப்பிரமணி பெண்களை கவர்வதில் கில்லாடியாக இருந்துள்ளார். முதல் மனைவியை திருமணம் செய்துகொண்டு அவர் அணிந்திருந்த நகை மற்றும் வரதட்சணையாக கொடுத்த பணத்தை வைத்து ஜாலியாக சுற்றி வந்துள்ளார்.

  Also Read:  சென்னையில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா... இந்த இடங்களில் கடைகள் மூடல்..

  மீண்டும் முதல் மனைவியிடம் பணம் நகை கேட்டபோது கிடைக்காததால் அந்த பெண்ணை கழற்றிவிட்டு, தான் பணிபுரியும் தனியார் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக இருந்த நித்யா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அந்தப் பெண் கொடுத்த நகை மற்றும் வரதட்சணையை வைத்து வாழ்க்கையை ஜாலியாக நடத்தியுள்ளார்.

  அந்தப் பெண்ணிடம் இனி பணம் நகை இல்லை என்று தெரிந்து கொண்டு வாழ்க்கைப் போர் அடித்ததால் அதன் பிறகு மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஜாலியாக இருந்து வந்துள்ளது தெரிய வருகிறது.

  இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் இருந்து கொண்டு மூன்று திருமணங்களை செய்து வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவரை கைது செய்த போலீசார், ஏமாற்றிய கணவரின் பெற்றோர்கள் மற்றும் இரண்டாவது மனைவியைத் தேடி வருகின்றனர்.

  தி.கார்த்திகேயன், செய்தியாளர் - கரூர்.

  Published by:Arun
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Karur