லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எனது வங்கி கணக்கு முடக்கப்படவில்லை என முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த 22ம் தேதி சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் வீடு மற்றும் உறவினர்கள் வீடு நிறுவனம் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 14 மணி நேர நடந்த சோதனையில் ரூ.25,56,000 பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இது திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை. சோதனையின் போது பறிமுதல் செய்துள்ள பணம் மற்றும் ஆவணங்களுக்கு கணக்கு உள்ளது. அதை காட்டியுள்ளோம்.
Also read: பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் உடல் எடை மெலிந்த குழந்தை தற்போது எப்படி உள்ளது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
இதுபோன்ற சோதனை மிரட்டல் மூலம் கருரில் கட்சியின் செயல்பாட்டை தடுக்கலாம் என நினைக்கின்றனர். இது ஒரு போதும் நடக்காது. என் மீது நடத்தப்படும் சோதனை என்பது எதிர்பார்த்த ஒன்று தான். இதை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளோம் என்ற விஜயபாஸ்கர், சென்னை மற்றும் கரூரில் எனக்கு சொந்த வீடு கிடையாது. கடந்த 35 வருடமாக கரூரில் தொழில் செய்து வருகிறேன் என்றார்.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுக ஆள் பிடிக்கும் படலத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது கண்டிக்கதக்கது. குறிப்பாக, போக்குவரத்துத் துறையில் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகளை வேண்டும் என்றே திட்டமிட்டு இடமாற்றம் செய்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் இது போன்று நடந்து வருகிறது. இது நல்லதற்கு அல்ல என்றார்.
நடந்து முடிந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதா? என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், இது உண்மை அல்ல. வங்கி கணக்கு முடக்கப்பட வில்லை என்றார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தான் என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.