பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களில் இருந்த புளியில் பல்லி இருந்ததாக சொல்லப்படுவது குறித்தும், பொங்கல் பரிசு பொருட்கள் அனைத்தும் தரமற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டு இருப்பது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என
பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்திற்கு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைப்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடியை, அவமரியாதை செய்யும் விதமாக, பாதுகாப்பு குறைபாடு, விவசாயிகள் போராட்டத்தில் தடுத்து நிறுத்தம் காரணத்தால் பிரதமர் நரேந்திர மோடி திருப்பி சென்றார். அந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கரூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் தலைமையில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பிஜேபியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும் சொல்ல முடியாது இது திட்டமிட்ட சதி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்த சதி. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்வதிலும் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படு தோல்வி அடைவது உறுதி.
Read More : சிவகங்கையில் சேவல் சண்டைக்கு தயாராகும் சேவல்கள்..!
பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலையில், சட்ட ஒழுங்கை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவதற்கான விவாதங்கள் தொடங்கியுள்ளது. இது அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.
Must Read : ஜனவரி 17ம் தேதி அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களில் உள்ள புளியில் பல்லி உள்ளது. பொருட்கள் அனைத்தும் தரமற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
செய்தியாளர் : தி.கார்த்திகேயன், கரூர்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.