Home /News /tamil-nadu /

'100 நாள் வேலை திட்ட பணியாளர்களை  விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்' - விவசாயிகள் சங்க பிரதிநிதி கோரிக்கை

'100 நாள் வேலை திட்ட பணியாளர்களை  விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்' - விவசாயிகள் சங்க பிரதிநிதி கோரிக்கை

விவசாயிகள் சங்க பிரதிநிதி

விவசாயிகள் சங்க பிரதிநிதி

Karur District : 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை  விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கி, கூட்டத்தொடரில் இதுபற்றி அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்க பிரதிநிதி தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    கரூர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நிலக்கடலை, எள், சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு அறுவடை செய்ய அனுமதிக்கக்கோரி சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டுமென கரூர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

    கரூர் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டு காலமாக போதிய மழை இல்லாத காரணத்தினால் விவசாயமே செய்ய முடியாமல் இருந்தது. இந்த வருடம் நல்ல மழை பெய்ததால், எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மக்காச்சோளம் ஆகியவை பல ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்து இரவு பகல் பாராமல் தண்ணீர் பாய்ச்சி, மயில் மற்றும் கால்நடைகளில் இருந்து காப்பாற்றி தற்போது அறுவடை செய்யும் காலம் நெருங்கி விட்டது. அறுவடை செய்ய ஆள் கிடைக்காத காரணத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நில கடலை நிலத்திலேயே முளைக்கும் தருவாயில் உள்ளது.

    இதுபற்றி வெள்ளியணை ஊராட்சி மன்றத் தலைவரும், கரூர் மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதியான சுப்பிரமணி தெரிவித்தபோது, நடப்பாண்டில் கரூர் மாவட்டத்தில் எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை 15 ஆயிரம் ஏக்கரிலும், எள் 10 ஆயிரம் ஏக்கர், சூரியகாந்தி 8 ஆயிரம் ஏக்கர், மக்காச்சோளம் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன.



    ஆள் பற்றாக்குறை காரணமாக அறுவடை செய்ய வேலையாட்கள் கிடைக்காத காரணத்தினால், எண்ணெய் வித்துக்கள் நிலத்திலேயே முளைக்கும் தருவாயில் உள்ளன.



    இவ்வாறு வீணாகக்கூடிய பயிர்களை போக மீதமுள்ள பயிர்களை அறுவடை செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இத்தகைய தருவாயில் வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையாக எண்ணெய் வித்துக்களை அறுவடை செய்வதற்கு அவசரகால உதவியாக, 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை  விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கி, கூட்டத்தொடரில் இதுபற்றி அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் : தி.கார்த்திகேயன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Karur

    அடுத்த செய்தி