Farmers : ஏக்கருக்கு 50,000 ரூபாய் செலவு செய்தோம்... 1000 ரூபாய் கூட கிடைக்கவில்லை.. ஊரடங்கால் கரூரில் காய்கறி பயிரிட்ட விவசாயிகள் வேதனை

காய்கறி தோட்டம்- கரூர்

காய்கறி விலை வீழ்ச்சியாலும், கொரோனா கட்டுபாட்டாலும் 1000 ரூபாய் முதல் கூட எடுக்க முடியவில்லை என கரூர் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • Share this:
    கரூர் மாவட்டத்தில், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை, கடவூர், வெள்ளியணை, காணியாளம்பட்டி, உப்பிடமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3000 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக வெண்டை, கத்தரி, தக்காளி மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு 50,000  ரூபாய் செலவு செய்து 50 நாளில் காய்கறிகள் அறுவடை துவங்கும் நிலையில், கொரோனா கட்டுபாட்டாலும் மற்றும் கடுமையான விலை வீழ்ச்சியாலும் வேதனையில் உள்ளனர்.

    சுமார் 25 கிலோ வெண்டை மூட்டை 100 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 30 கிலோ மூட்டை 150 ரூபாய்க்கும், தக்காளி 30 கிலோ பெட்டி 100 ரூபாய்க்கும் மட்டுமே விலை போவதால் விவசாயிகள் முதலீடு கூட எடுக்க முடியாமல் கவலை அடைந்துள்ளனர். காய்கறிகளை உரிய பருவத்தில் பறிக்காவிட்டாலும் காய்கறி சாகுபடி வீணாகி விடும் என்பதால், காய்கறிகளை செடியிலிருந்து பறித்து வயலிலே கொட்டுவதும், ஆடு மாடுகளுக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    கரூர் விவசாயி


    இது குறித்து கரூர் ஒரு விவசாயி கூறுகையில், சரியான பருவ மழை இல்லாததாலும், கடுமையான வெயிலாலும் தண்ணீரின்றி காய்ந்து காய்கறிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிக விலைக்கு வாங்கி உரிய நேரத்தில் அடித்து சாகுபடி செய்து வருகின்றோம். அப்படி அறுவடை செய்து காய்கறிகளை நல்ல விலைக்கு விற்று செலவு செய்த முதலீடை எடுக்கலாம் என நினைத்த நிலையில், கொரோனா கட்டுபாட்டாலும் கடுமையான விலை வீழ்ச்சியாலும் பெரும் துயரத்தில் உள்ளோம் என்றார்.

    மேலும் வாரச்சந்தைகளுக்கு வியாபாரிகளிடம் கொடுக்கச் சென்றால் மூட்டை 100 ரூபாய்க்கு விற்றதில், 25 ரூபாயை சந்தை ஒப்பந்ததாரர்கள் சுங்கவரி என பிடுங்கிக் கொள்வதால் மேலும் நஷ்டம் ஏற்படுவதாகும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    மேலும் படிக்க... தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் - வானிலை மையம்

    அரசு விவசாயிகள் விளைவித்த பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் சந்தைகளுக்கு காய்கறிகள் கொடுக்கச் செல்லும்போது சுங்க வரி வசூலிக்கக்கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: