Home /News /tamil-nadu /

ரூ.12 லட்சம் கடனுக்கு ரூ.68 லட்சம் கட்ட சொல்லி விவசாயி சொத்து அபகரிப்பு... எஸ்பிஐ வங்கியை கண்டித்து விவசாயிகள் ஆர்பாட்டம்

ரூ.12 லட்சம் கடனுக்கு ரூ.68 லட்சம் கட்ட சொல்லி விவசாயி சொத்து அபகரிப்பு... எஸ்பிஐ வங்கியை கண்டித்து விவசாயிகள் ஆர்பாட்டம்

ஸ்பிஐ வங்கியை கண்டித்து விவசாயிகள் ஆர்பாட்டம்

ஸ்பிஐ வங்கியை கண்டித்து விவசாயிகள் ஆர்பாட்டம்

Karur News | கரூர் மாவட்டத்தில் விவசாயி வாங்கிய கடனுக்காக சொத்தை அபகரித்த எஸ்பிஐ வங்கியை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள தேசியமாக்கப்பட்ட எஸ்.பி.ஐ வங்கியில் விவசாயி ரூ 12 லட்சம் கடன் வாங்கியத்திற்கு ரூ.68 லட்சம் கட்ட சொல்லி சொத்தை அபகரித்து கொண்டு விவசாயியை தற்கொலைக்கு தூண்டியதை கண்டித்து தென்னிந்திய நதிகள்  இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மண்டை ஓடுகளை  கழுத்தில் தொங்கவிட்டபடி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை பாரத ஸ்டேட் வங்கியில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கரும்புலிபட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர் மற்றும் பைப்லைன் போடுவதற்கு ரூ.12 லட்சம் கடன் பெற்றதில் அதில் 2 லட்சம் பிடித்தம் செய்து கொண்டு 10 லட்சம் மட்டும் கொடுத்துள்ளனர். வாங்கிய 10 லட்சத்தில் 9 லட்சம் பணத்தை திருப்பி கட்டியுள்ளார்.

தற்பொழுது, 68 லட்சம் தரவேண்டுமென்று வழக்கு போட்டு பூர்வீக சொத்தை, 5 வாரிசுகள் இருக்கும் பொழுது அவர்களை கேட்காமலே ரூ.58 லட்சத்திற்கு 11.5 ஏக்கர் விவசாய நிலத்தினை ஏலம் விட்டதினால் விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலைக்கு துண்டிய குளித்தலை எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் குளித்தலை பேருந்து நிலையம் முன்பாக 100க்கும் மேற்பட்டோர்கள் மண்டை ஓட்டை கழுத்தில் தொங்கவிட்டபடி  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read : 24 மணி நேரம் கெடு விதித்த செந்தில் பாலாஜி... ஆளுநரை சந்தித்து அண்ணாமலை புகார் மனு

விவசாயிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தினால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது குளித்தலை டிஎஸ்பி ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு தலைவர் உட்பட  அனைவரையும் போலீசார் கைது செய்து அண்ணா சமுதாய கூடத்தில் அடைத்தனர். பிறகு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் 4 பேர் போலீசாருடன் சென்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவை இந்திய பிரதமர் மோடியிடம் கொண்டு சென்று கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயிகள் வாங்கிய ஒரு லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டுமென அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் மனுவை பெற்றுக்கொண்டு பிரதமருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதன் பின்னர் அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில்,பாஜக நரேந்திரமோடி தேர்தலின் போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று கூறியவர் தேர்தல் முடிந்தவுடன் விவசாயிகள் அடிமைகள் என்றும், நான் பிரதமரானால் விவசாயப் பொருட்களின் விலையை இரு மடங்காக உயர்த்துவேன் என்றார்.  ஆனால் அதனை செய்யவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 30 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த மோடியின் ஒன்றிய அரசாங்கம்,  இந்திய நாட்டில் 90 கோடி விவசாயிகள் வாங்கிய ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யாமல் உள்ளது.

தனியார் வங்கிகள் தான் விவசாயிகளை அடியாட்களை வைத்து வஞ்சித்து வந்த நிலையில் தற்போது மோடியின் ஒன்றிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்  விவசாயிகளுக்கு ஒத்துவராத சட்டத்தைப் பயன்படுத்தி கடன்பெற்றதற்காக விவசாயிகளுக்கு தெரியாமலே விவசாயிகளின் நிலங்களை ஏலம் விட்டு விவசாயிகளிடம் கொள்ளையடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர் : கார்த்திகேயன், கரூர்
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி