ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

திமுக எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின்

இன்று கரூர் வருகை தந்த எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்திருந்த இலவச அரிசிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கரூரில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மாவட்ட திமுக எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

  கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வரும் ஏழை, எளிய மக்களை பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ 4000 மற்றும் 13 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவி வழங்க திட்டமிட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி) குளித்தலை ஆகிய நான்கு சட்டப் பேரவை தொகுதியில் உள்ள 3,19,816 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ அரிசி சுமார் ரூ. 4 கோடி மதிப்பில் 1,279 டன் இலவச அரிசி வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

  Also read... காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பிறந்தநாள், திருமணநாளன்று விடுமுறை - மாவட்ட எஸ்.பி., அறிவிப்பு!

  இன்று கரூர் வருகை தந்த எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்திருந்த இலவச அரிசிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி, கரூர் தொகுதிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், கிருஷ்ணராயபுரம் தொகுதி பேரூராட்சி பகுதி, குளித்தலை தொகுதிக்கு உட்பட்ட மணத்தட்டை 4 தொகுதிகளில் இலவச அரசிகளை வழங்கினார்.

  செய்தியாளர் - தி.கார்த்திகேயன்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: