அம்மா உணவகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்.. குளித்தலை நகராட்சி கூட்டத்தில் சலசலப்பு..
அம்மா உணவகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்.. குளித்தலை நகராட்சி கூட்டத்தில் சலசலப்பு..
அம்மா உணவகத்திற்கு எதிர்ப்பு
Amma Unavagam | அம்மா உணவகங்கள் செயல்பட்டுவரும் இடங்களில் ஏற்படும் செலவினங்கள் எவ்வளவு தொகையாக இருந்தாலும் அதை அரசு ஏற்றுக்கொண்டு அம்மா உணவகத்தை செயல்படுத்த வேண்டுமென தமிழக முதல்வர் கூறியுள்ளபோதும் கரூரில் அம்மா உணவகத்தை புறக்கணித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் இன்று நகராட்சி கூட்டம் தலைவர் சகுந்தலா தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி ஆணையர் சுப்புராம் தீர்மானங்களை வாசித்தார். இந்த கூட்டத்தில் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்திற்கு 2022-2023 ஆம் ஆண்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதற்கும், உத்தேச செலவு தொகையாக ரூ.40 லட்சம் மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்படும் என தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்காமல் செலவின தொகை குறித்து விளக்கமான தகவல்கள் நகராட்சி தீர்மானம் கூட்டத்தில் வைக்க வேண்டும், அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறும் ஆணையர். அம்மா உணவகம் தொடர்பான தீர்மானத்தில் செலவினம், அதற்கு உரிய விளக்கங்களை கூறவில்லை எனவும், மேலும் இந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 28 தீர்மானங்களையும் ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டு கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
அம்மா உணவகங்கள் செயல்பட்டுவரும் இடங்களில் ஏற்படும் செலவினங்கள் எவ்வளவு தொகையாக இருந்தாலும் அதை அரசு ஏற்றுக்கொண்டு அம்மா உணவகத்தை செயல்படுத்த வேண்டுமென தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி அம்மா உணவக செலவின தொகைக்கு கொண்டு வந்த தீர்மானத்திற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென நகராட்சி தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா தெரிவித்தார்.
அதை ஏற்றுக்கொள்ளாத திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்துடன் கூட்டத்தை புறக்கணித்து 28 தீர்மானங்களில் முறையான கணக்கு வழக்கு காட்ட வில்லை என ஆணையர் மற்றும் நகராட்சி தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த நகராட்சி ஆணையர் , வேண்டும் என்று செல்கிறார்கள். கவுன்சிலர்களுக்கு வேலையே இல்ல. இதை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.
தி.கார்த்திகேயன்,செய்தியாளர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.