ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிபிஐக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதால் பரபரப்பு

சிபிஐக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதால் பரபரப்பு

திமுக-சிபிஐ

திமுக-சிபிஐ

Puliyur : கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி, திமுக கூட்டணியில் உள்ள 1ஆவது வார்டில் வெற்றி பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், இந்த பேரூராட்சியில் சிபிஐ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே கவுன்சிலரான கலாராணி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால் திடீர் திருப்பமாக, இன்று நடைபெற்ற பேரூராட்சி தலைவர் தேர்தலில் கலாராணி போட்டியிடவில்லை. மாறாக, திமுக சார்பில் 3ஆவது வார்டில் வெற்றி பெற்ற புவனேஸ்வரி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  அங்கே, வேறு யாரும் போட்டியிடாததால் திமுகவைச் சேர்ந்த புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் இதனால் அங்கே பரபரப்பு நிலவியது.

  இந்நிலையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி விடுதலை சிறுத்தை கட்சிக்கு அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், அங்கே திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து வெற்றி பெற்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.

  Must Read : தேனியில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளித்த திமுக கவுன்சிலர்கள்.. காங்கிரஸ் நகராட்சித் தலைவர் வேட்பாளர் வெளிநடப்பு..

  இதேபோல, தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரத்திலும் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பதவியில், திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் அங்கே விசிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: CPI, DMK, DMK Alliance, Karur, Local Body Election 2022