கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சி பகுதியில்
அதிமுகவும்,
திமுகவும் நேரடியாக 41 வார்டுகளில் மோதுகின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணியில்
காங்கிரஸ் 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு வார்டுகளும், சிபிஎம் கட்சிக்கு 1 வார்டும், மதிமுக கட்சிக்கு ஒரு வார்டும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 1 வார்டும், மொத்தம் 7 வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 41 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கரூர் மாநகராட்சி 11வது வார்டு பகுதியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒதுக்கினர். இந்த 11வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான ஜெயராமன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவரது வேட்புமனு தாக்கல் கடைசி நாளில் கூட காலதாமதமாகவே செய்தார். இந்நிலையில், அதே 11 வது வார்டில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வேட்பாளராக பழனி குமார் என்பவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநகராட்சியில் ஒரு வார்டு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வார்டிலும் திமுக வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளது திமுக கூட்டணி கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே வார்டு, ஒரே கூட்டணி, ஆனால் இரண்டு வேட்பாளர்கள் என புது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். திமுக 11 வார்டு பகுதிக்கு விருப்பமனு அளித்து அங்கு திமுக கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்ட பழனிகுமார் அந்த பகுதியில் மிகவும் பழக்கமானவர். அதேபோல் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அதே வார்டு ஒதுக்கப்பட்டு போட்டியிடுகிறார்.
இதனால், கரூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையே தேர்தல் நேரத்தில் சலசலப்பு ஏற்படும். இந்நிலையில் கரூர் மாநகராட்சி 11வது வார்டு பகுதியில் போட்டியிடும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரும், திமுக வேட்பாளரும் தங்கள் மனுவை யாரும் வாபஸ் பெறாத நிலையில், மாநகராட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள இறுதி வேட்பாளர் பட்டியலில் இருவருடைய பெயரும் இடம்பெற்றுள்ளது.
Read more : தமிழக அரசின் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கரூர் மாநகராட்சி 11வது வார்டு பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கும் உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டு அவரும் தேர்தலில் களத்தில் நிற்கிறார்.
Must Read : ராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ திணறல்.. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்..
இந்நிலையில் இன்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரக் கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மட்டும் பங்கு பெறவில்லை. ஆனால் திமுக சார்பில் அதே வார்டில் பழனிகுமார் என்பவர் போட்டியிடுபவர் அந்த வேட்பாளர்களுடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : தி.கார்த்திகேயன், கரூர். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.