Home /News /tamil-nadu /

அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாமில் அதிகாரியை வறுத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாமில் அதிகாரியை வறுத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட செய்திகள்

Karur District : அங்கன்வாடி மையங்கள் ஊட்டச்சத்துள்ள குழந்தைகள் எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கேள்வி எழுப்பினார்.

    கரூர் மாவட்டம்,  தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் காளியப்பனூர் பேருந்து நிலையம் அருகில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் துறை சார்பாக பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உயரம் மற்றும் எடை மதிப்பிடும் முகாம் நடைபெற்றது. ஊட்டச்சத்து உணவு குறைபாட்டை கண்டறிதல் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தாந்தோணி வட்டாரத்தில் 141 அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ளன. இதில் பிறந்த குழந்தைகள் முதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1,642 பேரும், மூன்று வயது முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் 5,032 பேரும் உள்ளனர்.
    நிகழ்ச்சியின்போது தாந்தோணி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் உமாவிடம் குழந்தைகள் ஆரோக்கியம் குறித்தும், வட்டாரத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் ஊட்டச்சத்துள்ள குழந்தைகள் எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கேள்வி எழுப்பினார்.



    கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியாமல் திணறிய அதிகாரியிடம், இந்த நிகழ்ச்சியில் நீங்கள் சமைத்து வைத்த உணவு வகைகளை பார்வையிடுவதற்கு நான் இங்கே வரவில்லை.



    குழந்தைகளின் ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம். அது குறித்து துல்லியமான தெளிவுடன் அதிகாரியான நீங்கள் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தி.கார்த்திகேயன்,செய்தியாளர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Karur

    அடுத்த செய்தி