மனு கொடுத்த 10 நிமிடத்தில் மாற்றுதிறனாளிக்கு குடியிருப்பு வழங்கிய கரூர் மாவட்ட ஆட்சியர்
மனு கொடுத்த 10 நிமிடத்தில் மாற்றுதிறனாளிக்கு குடியிருப்பு வழங்கிய கரூர் மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்
Karur Collector Prabushankar | மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் 10 நிமிடத்திற்குள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை ஒதுக்கி அதற்கான ஆணையை உடனடியாக வழங்கினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கணவரால் கைவிடப்பட்ட நிலையில், கால்கள் செயலிழந்த மாற்றுதிறனாளி தனது 2 மகன்களுடன் மகாலட்சுமி என்ற பெண் உதவிக்கோரி மனு வழங்கிய 10 நிமிடத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்பு வழங்கி, அதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.
கரூர் மாநகர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள சாத்தானி சந்து தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது மூத்த மகன் பிறந்தது முதலே கால்கள் செயல்படாத நிலையில் உள்ளார். இளைய மகனுக்கு சில வருடங்களுக்கு முன்பு வலிப்பு நோய் ஏற்பட்டதன் காரணமாக கால்கள் செயல்படாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் மகாலட்சுமியின் கணவர் அவருடன் வாழாமல் கைவிட்டுவிட்டார். அம்மா வீட்டில் வசித்து வரும் மகாலட்சுமி வேலைக்கு சென்று தனது இரண்டு மகன்களையும் காப்பாற்றி வரும் நிலையில், அவ்வப்போது மகன்களுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
இதன் காரணமாக இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் உதவி கோரி தனது இரண்டு மகன்களுடன் வந்து கோரிக்கை மனு வழங்கினார்.
மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் 10 நிமிடத்திற்குள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை ஒதுக்கி அதற்கான ஆணையை உடனடியாக வழங்கினார். மகாலட்சுமியின் நிலையை அறிந்து உதவி கோரி மனு வழங்கிய 10 நிமிடத்திற்குள் குடியிருப்பை வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக முதல்வருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் : தி.கார்த்திகேயன் , கரூர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.