தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாள் கோரிக்கையான மாதம் தோறும் ரூ.3000 உதவித்தொகை வழங்க வேண்டுமென்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி இன்று சென்னை கோட்டையில் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
தமிழகம் முழுவதிலிருந்தும் நேற்று பல்வேறு மாவட்டங்களில் ரயில் மூலம் மாற்றுத்திறனாளிகள் செல்லவிருந்த நிலையில், கரூர் ரயில் நிலையத்தில் இருந்து 22 மாற்றுத்திறனாளிகள் செல்ல இருந்தனர். இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மாற்றுத்திறனாளிகளிடம் சுமார் அரை மணி நேரம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து 22 மாற்றுத்திறனாளிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் கரூர் ரயில் நிலையத்தில் சுமார் 1மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கரூர் மாற்றுத் திறனாளிகள் நலசங்க மாவட்ட செயலாளர் கணேசன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை 1000 ரூபாய் கொடுக்றாங்க. உண்மையில் அந்த 1000 ரூபாயை வைத்து ஒரு மாற்றுத் திறனாளி பராமரிப்பது என்பது மிக கடினமான காரியம். அதனால் தான் இந்த சங்கத்தில் இருந்து இன்று போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
தமிழ்நாட்டின் அருகில் இருக்கும் கோவா , பாண்டிச்சேரி , கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்த உதவித் தொகை ரூ.3000 கொடுக்றாங்க. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1000 கொடுக்றாங்க. ரூ.1500 கொடுக்க போவதா சொன்னாங்க. எங்களுக்கு ரூ.3000 ரூபாய் வழங்க வேண்டும். அதிக பாதிப்பிற்குள்ளான மாற்றுத் திறனாளிக்கு ரூ.5000 ரூபாய் வழங்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் இந்த போராட்டம் நிறுத்தமாட்டோம். அரசாங்கம் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்கின்றனர். போலீசின் அத்து மீறலும் நடக்கின்றது. நாங்கள் இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
தி.கார்த்திகேயன்,செய்தியாளர். கரூர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.