Karur District : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் கரூரில் 5.15 ஹெக்டேர் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது .ஆக்கிரமிப்புகளில் உள்ள வாழை மரங்கள் வேரோடு அகற்றப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் கிராமத்தில் உள்ள 1.63 ஹெக்டேர் பரப்பளவில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியிலுள்ள வாழை மரங்கள் வேரோடு அகற்றும் பணி இன்று நடைபெற்றது. மண்மங்கலம் வட்டத்தில் மட்டும் 5.15 ஹெக்டேர் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு இதுவரை 3.33 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கையகப்படுத்தப் பட்டுள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்றபடுவதுடன் பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த தென்னை மரங்கள் கையகப் படுத்தப்பட்டுள்ளன. கையகப்படுத்தப்பட்ட தென்னை மரங்களில் பொதுப்பணி துறை நம்பர் எழுதும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பணி முடிந்தவுடன் இவற்றை ஏலம் விடும் பணி தொடங்கப்படும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் மண்மங்கலம் வட்டாட்சியர் ராதிகா, காவிரி வடிநில உபகோட்ட உதவி பொறியாளர் கார்த்திக் உள்ளிட்ட வருவாய் துறை, நீர்வள ஆதார துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதேபோல் கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட வட்டங்களில் காவிரி மற்றும் அமராவதி ஆற்றின் கரையோரங்களில் உள்ள பலநூறு ஹெக்டேர் பரப்பளவிலான நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி அதிகாரிகள் மூலம் நடைபெற்று வருகிறது.
தி.கார்த்திகேயன்,செய்தியாளர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.