ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தடுப்பூசி செலுத்திக்கொள்ள வீடுகளுக்கு சென்று அழைத்த மாவட்ட ஆட்சியர்!

தடுப்பூசி செலுத்திக்கொள்ள வீடுகளுக்கு சென்று அழைத்த மாவட்ட ஆட்சியர்!

 இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்த வயது முதிர்ந்த தம்பதியின் குடும்பத்தினரை சந்தித்த ஆட்சியர் வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் நன்மைகளை விளக்கி கேட்டுக்கொண்டதற்கிணங்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள  சம்மதித்தனர்

  • 1 minute read
  • Last Updated :

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனி பகுதியில் இதுவரை கொரோனா  தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தடுப்பூசி செலுத்தி கொள்ள அழைப்பு விடுத்தார். தொடர்ந்து வீடுகளுக்கே சென்று சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்தினர். இந்த நிகழ்வு பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக மெகா கொரோனோ தடுப்பூசி முகாம் இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெறுகிறது.

கரூர் மாவட்டத்தில் 624 தடுப்பூசி முகாம் மையங்களில், 50 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் காலை முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில்,  கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனி பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற ஆட்சியர்,  அப்பகுதியில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் என்பதை அறிந்தார். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொரோனா  தடுப்பூசியின், நன்மைகள் குறித்து எடுத்துக்கூறி  தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

அழைப்பைத் தொடர்ந்து அவர்களும் முகாமிற்கு வந்து தடுப்பூசி அளித்து கொண்டனர்.புதுப்பட்டி கிராமத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்த வயது முதிர்ந்த தம்பதியின் குடும்பத்தினரை சந்தித்த ஆட்சியர் வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் நன்மைகளை விளக்கி கேட்டுக்கொண்டதற்கிணங்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள  சம்மதித்தனர்.

மேலும் படிக்க: கூட்டுறவு வங்கி நகைக்கடன் மோசடி: அதிரடியை தொடங்கியது தமிழக அரசு!

அதனைத்தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் குழுவினர் அவர்களுக்கு வீட்டிலேயே சென்று தடுப்பு ஊசி செலுத்தினர். இந்த நிகழ்வு பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

செய்தியாளர்: கார்த்திகேயன்

First published: