சிலர் தான் இருப்பதை காட்டிக் கொள்வதற்காக மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு வைப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்டம், சேங்கல், லாலாப்பேட்டை, அய்யர்மலை பகுதிகளில் துணை சுகாதார நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா மற்றும் குளித்தலை அண்ணா சமுதாயக் கூடத்தில் முதியோர் உதவித் தொகைக்கான ஆணை வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டார், அப்போது, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகை மின் மாநிலம் என்று கூறியவர்கள் நாலரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஏன் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில் ஆறு மாதங்களில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். விவசாயத்திற்கு மின்கட்டணம் மூலம் மின்சாரம் பெற்று வரும் பூந்தோட்ட மின் இணைப்பு பெற்றவர்களுக்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இலவச மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஒரு சிலர் தங்கள் இருப்பதை காட்டிக் கொள்வதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். செய்தித்தாள்கள் தொலைக்காட்சிகளில் தாங்கள் இருப்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் அப்படி செய்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தர்ணா போராட்டம் நடத்தினார்.
அவரைதான் மறைமுகமாக தாக்கி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இவ்வாறு தெரிவித்தாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Also Read: உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவு.. இளைஞர் கொலையில் திடீர் திருப்பம்
மேலும் கரூர் மாவட்டத்தில் பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீட்டிற்கும் குடிநீர் குழாய் அமைப்பதில் முறைகேடு நடந்து வருவது குறித்த கேள்விக்கு, அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது. புகாரில் உண்மை இருந்தால் மாவட்ட நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
செய்தியாளர்: தி.கார்த்திகேயன் (கரூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, DMK, Jothimani, Politics, Senthil Balaji