Home /News /tamil-nadu /

'பாஜக நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல், சுவர் விளம்பரங்களை அழித்து அராஜகம்' - கரூர் மாவட்ட தலைவர் பரபரப்பு புகார்..

'பாஜக நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல், சுவர் விளம்பரங்களை அழித்து அராஜகம்' - கரூர் மாவட்ட தலைவர் பரபரப்பு புகார்..


பாஜக நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் என புகார்

பாஜக நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் என புகார்

Karur BJP | கரூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் பாஜகவினர் எழுதிய சுவர் விளம்பரத்தை அழித்துவிட்டு, திமுகவினர் சுவர் விளம்பரங்கள் எழுதி உள்ளனர். அதற்கு எதிர்த்து கேள்வி எழுப்பியபோது பாஜக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியுள்ளதாக கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தி அராஜகப் போக்கை நிகழ்த்தியுள்ள திமுகவினர் மீது மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், மிகப்பெரிய அளவில் கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அம்மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

    கரூர் கோட்டாட்சியர் அலுவலகம் சுற்றுச்சுவரில் ஒரே நேரத்தில் திமுக மற்றும் பாஜக கட்சிகள் சுவர் விளம்பரம் எழுத வந்ததால் மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கரூர் மாநகரில் பரபரப்பு ஏற்பட்ட சமயத்தில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

    இதன் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் சுவர் விளம்பரத்தை அழித்து, திமுகவினர் சுவர் விளம்பரம் எழுதியதாகவும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாக திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், அக்கட்சியினர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    இதையும் படியுங்கள் | கரூரில் சாலை போடாமலே போட்டதாக கூறி 3 கோடி ரூபாய் முறைகேடு - 4 அதிகாரிகள் பணியிடைநீக்கம்

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன், கரூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் பாஜகவினர் எழுதிய சுவர் விளம்பரத்தை அழித்துவிட்டு, திமுகவினர் சுவர் விளம்பரங்கள் எழுதி உள்ளனர்.



    அதற்கு எதிர்த்து கேள்வி எழுப்பியபோது பாஜக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியுள்ளனர். அந்த அராஜக போக்கை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கரூரில் ஐந்து இடங்களில் பாஜகவினர் எழுதிய சுவர் விளம்பரங்களை அழித்துவிட்டு, தங்களது சுவர் விளம்பரங்களை திமுகவினர் எழுதி உள்ளனர்.

    இதையும் படியுங்கள் | பிரதமர் மோடி, அண்ணாமலை படங்களில் கருப்பு பெயிண்ட் பூசிய மர்மநபர்கள் - கரூரில் பரபரப்பு

    பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தி அராஜகப் போக்கை நிகழ்த்தியுள்ள திமுகவினர் மீது மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், மிகப்பெரிய அளவில் கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆளுநரை சந்தித்து மனு வழங்கவோம் எனவும் தெரிவித்தார்.

    செய்தியாளர் : தி.கார்த்திகேயன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: BJP, Karur

    அடுத்த செய்தி