'சொத்து வரி உயர்வு மக்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்' - கரூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
'சொத்து வரி உயர்வு மக்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்' - கரூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
கரூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
ADMK protest : கொரோனா பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, வருமானம் குறைவு என்று பன்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படும் நகர்புற மக்களின் தலையில் 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தியுள்ளது திமுக அரசு என அதிமுகவினர் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்து வரி உயர்வுக்கு எதிராக திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூரில் 1000க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட அதிமுக சார்பில், கரூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சட்டமன்றத் தேர்தலின் போது கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்கள் மீண்டு வரும் வரை தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட மாட்டாது என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த திமுக, கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து மீளமுடியாமல் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் போது, 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, வருமானம் குறைவு என்று பன்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படும் நகர்புற மக்களின் தலையில் 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தியுள்ளது திமுக அரசு. இந்த சொத்து வரி உயர்வு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டு சொத்துவரியை உயர்த்தி இருக்கும் திமுக அரசைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வினை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் : தி.கார்த்திகேயன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.