போடாத ரோட்டுக்கு ரூ.3 கோடிக்கு பில் போட்ட திமுக ஒப்பந்ததாரர்.. ஆதாரங்களை அடுக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
போடாத ரோட்டுக்கு ரூ.3 கோடிக்கு பில் போட்ட திமுக ஒப்பந்ததாரர்.. ஆதாரங்களை அடுக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
Karur District : நன்றாக உள்ள சாலைகள், புதிதாக அமைக்கப்பட உள்ளதாக கூறி சுமார் 3 கோடி அரசு பணம் எடுக்கப்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர், எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் சாலைகள் புதிதாக போடாமலே போட்டதாக கூறி திமுகவை சேர்ந்த ஒப்பந்ததாரர் பணம் எடுத்துள்ளனர் என ஆதாரத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஈசநத்தம், கூம்பூர், வீரியப்பட்டி ஆகிய சாலைகளை கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் , கரூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் 170 கோடியில் நெடுஞ்சாலைத் துறையில் பணிகளுக்கு ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. ஈசநத்தம், கூம்பூர், வீரியப்பட்டி ஆகிய சாலைகளை, வேலை செய்யாமல் ஒப்பந்ததாரர் பணம் எடுத்துள்ளனர்.
நன்றாக உள்ள இந்த சாலைகள், புதிதாக அமைக்கப்பட உள்ளதாக கூறி சுமார் 3 கோடி அரசு பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணை நடத்த வேண்டும். இதற்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாது, கரூர் மாவட்டதில் நெடுஞ்சாலை துறை, கிரசர், சவுடு மண் என திமுகவினர் கூறு போட்டு விற்று வருகின்றனர். 140 கோடி ரூபாய் வேலையை அமைச்சரின் ஆதரவாளர் எம் .சி.எஸ் ஆனந்த் காண்ட்ராக்டர் ஒருவர் மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
மேலும் அதிமுக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பிரதிநிதித்துவம் தருவதில்லை, இதே நிலை நீடித்தால் அதிமுக பிரதிநிதிகள் ராஜினாமா செய்ய தயாராக உள்ளோம். மேலும் தீர்வு கிட்ட வில்லை என்றால் உண்ணாவிரதம் போரட்டத்தில் ஈடுபடவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர் : தி.கார்த்திகேயன் (கரூர்)
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.