கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

கடந்த வாரம் பொதுமக்களிடம் இருந்து 4 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை துறை ரீதியாக பிரித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

 • Share this:
  கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதல்வரிடம் கூறி நடப்பாண்டில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கரூரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

  கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் இன்று 32 இடங்களில் நடைபெற்று வருகிறது. கரூர் கோதூர் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியில்  பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்போது அவர் கூறும்போது, கரூர் மாவட்டத்தில் கொசுவலை, ஜவுளி, பஸ் பாடி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது, கரூர் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவதற்கு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

  தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த வாரம் பொதுமக்களிடம் இருந்து 4 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை துறை ரீதியாக பிரித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுத்து அதற்கு அரசாணைகள் விரைவில் வழங்கப்படும் என்றார்.

  Also read: மதுரையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் மரணம்; இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை!

  மேலும், கரூர் நகராட்சி பகுதிகளில் மனுக்களை பெற்ற பிறகு கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகராட்சி, 11 பேரூராட்சிகள், 157 ஊராட்சிகளிலும் மனுக்கள் பெறப்படும் என்றார். அந்த பெறப்படும் மனுக்களை பரிசீலித்து உரிய தீர்வு காணப்படும் என்றார்.

  செய்தியாளர் - தி.கார்த்திகேயன்
  Published by:Esakki Raja
  First published: