கரூர் மாவட்டம், தென்னிலை பகுதிக்கு உட்பட்ட ஆவுத்திபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் இளைஞர் நல்லசிவம். இவருக்கு சொந்தமான தோட்டத்தை அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர் தனது இடம் எனக் கூறி ஆக்கிரமித்துக் கொண்டதால், கடந்த ஒரு வருட காலமாக மாவட்ட ஆட்சியரிடம், காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
நல்லசிவம் தொடர்ந்து புகார் கொடுத்தும் எவ்விதபயனும் இல்லாத காரணத்தினால், இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் மன விரக்தியில் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து அருந்தியுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் நல்லசிவத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read : தமிழகத்தில் இன்று மிக கன மழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கோரிக்கை மனு வழங்க வந்த இளைஞர் ஒருவர் விஷம் அருந்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.