₹2.92 லட்சம் மின் கட்டணம் - கரூர் விவசாயிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்

கரூர் மாவட்டத்தில் ஒரு விவசாயிக்கு 2,92,500 ரூபாய் மின் கட்டணம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

₹2.92 லட்சம் மின் கட்டணம் - கரூர் விவசாயிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்
கோப்புப்படம்
  • Share this:
கரூர் மாவட்டம் செல்லாண்டிபாளையம் தட்டாங்காட்டைச் சேர்ந்த வீரப்பன் - லிங்கேஸ்வரி தம்பதியின் வீட்டிற்கு 2 மின் இணைப்புகள் உள்ளன.

இவர்கள் கடந்த காலங்களில் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளனர். 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் இவர்கள் மின்கட்டணம் செலுத்த வேண்டிய தேவையே இருந்ததில்லை.

ஊரடங்கு காரணமாக கணக்கீடு செய்யாததால் பழைய தொகையையே செலுத்துமாறு கூறப்பட்டிருந்த சூழலில், மின்வாரியம் சென்ற பக்கத்து வீட்டுக்காரரிடம் தங்கள் வீட்டிற்கான மின் கட்டணத்தை கேட்டு வருமாறு வீரப்பன், லிங்கேஸ்வரி தம்பதி கூறியுள்ளனர்.பக்கத்து வீட்டுக்காரர் வந்து 2,92,500 ரூபாய் மின் கட்டணம் என கூற, அதனை கேட்டு அதிர்ந்த தம்பதி, ராயனூர் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று முறையிட்டுள்ளனர்.

Also read... சென்னையில் போலீஸ், மீடியா, மாநகராட்சி என போலி ஸ்டிக்கர் ஒட்டி வாகனம் ஓட்டிய 94 பேர் மீது வழக்குகூடுதல் கட்டணம் வந்ததை முதலில் ஒப்புக்கொள்ளாத மின் வாரிய ஊழியர்கள், வீட்டில் வந்து அளவை பார்த்தபின்னர் தவறுதலாக கணக்கிடப்பட்டு விட்டதாகவும், கடிதம் கொடுங்கள் சரி செய்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading