Home /News /tamil-nadu /

17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்.. போக்சோ சட்டத்தின் கீழ் மருத்துவர் ரஜினிகாந்த் கைது!

கரூரில் 17 வயது சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக எலும்பு முறிவு மருத்துவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    கரூரில் ரஜினிகாந்த் என்பவருக்கு சொந்தமாக செயல்படும் எலும்பு முறிவு மருத்துவமனையில் பசுபதிபாளையத்தை சேர்ந்த 38 வயது பெண் பணியாற்றி வந்தார். தீபாவளி பண்டிகைக்கு மருத்துவமனை நிர்வாகம் போனஸ் வழங்காததால் அவர் பணியில் இருந்து விலகி உள்ளார்.

    இந்தநிலையில் அவரது மகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகம், தங்களது தாய்-க்கு போனஸ் போட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது.

    இதனையடுத்து அப்பெண்ணின் சிறுமி மருத்துவமனைக்கு சென்றதாக கூறுப்படுகிறது. அப்போது சிறுமியை மருத்துவர் ரஜினிகாந்த் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தில் மருத்துவர் ரஜினிகாந்த் மற்றும் உடந்தையாக இருந்த மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டது.

    இதில் தலைமறைவாக இருந்த மருத்துவர் ரஜினிகாந்த் மற்றும் உடந்தையாக இருந்த மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Karur, Sexual harassment

    அடுத்த செய்தி