ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜோதிமணி மற்றும் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு!

ஜோதிமணி மற்றும் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு!

ஜோதிமணி MP

ஜோதிமணி MP

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கரூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி மற்றும் திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

செந்தில்பாலாஜி, மற்றும் ஜோதிமணி தூண்டுதல் காரணமாக அவர்களது ஆட்கள் இரவு நேரத்தில் மாவட்ட ஆட்சியர் இல்லத்தில் அத்துமீறி நுழைந்து  மன உளைச்சலை ஏற்படுத்தியதாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் புகார் அளித்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி மற்றும் செந்தில் பாலாஜி மீது IPC 147, 353, 506 ( 1 ) என மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் தாந்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also watch: பிரசாரத்தின் போது சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய முதல்வர்!

Published by:Anand Kumar
First published:

Tags: Elections 2019, Karur S22p23, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019