• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • #Exclusive | மத்திய அரசோடு இணக்கமாகச் செல்ல டிடிவி தினகரன் முயற்சித்தார் - கருப்பு முருகானந்தம்

#Exclusive | மத்திய அரசோடு இணக்கமாகச் செல்ல டிடிவி தினகரன் முயற்சித்தார் - கருப்பு முருகானந்தம்

கருப்பு முருகானந்தம்

கருப்பு முருகானந்தம்

பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான கருப்பு முருகானந்தம் கடந்த மக்களவைத் தேர்தலில் தஞ்சையில் போட்டியிட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
டிடிவி தினகரன்தான் பாஜக உடன் இணக்கமாகச் செல்ல முயற்சித்தார் என கருப்பு தினகரன் டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு டிடிவி தினகரன் அளித்த பிரத்யேகப் பேட்டியில், “பாஜக-வின் அறிவுறுத்தலின்பேரில் கருப்பு முருகானந்தம் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்” என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

படிக்க... Exclusive | தூது அனுப்பினார் பொன்.ராதாகிருஷ்ணன்: டி.டி.வி.தினகரன் பரபரப்பு தகவல்

இதுகுறித்து கருப்பு முருகானந்தம் கூறுகையில், “டிடிவி தினகரனுடன் பேசியது உண்மைதான். ஆனால், குமரி தேர்தல் குறித்துப் பேசவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல டிடிவி தினகரன்தான் முயற்சித்தார்.

டிடிவி தினகரன் | TTV
டிடிவி தினகரன்


தேவை ஏற்பட்டால் பாஜக-வினரை தினகரன் சந்திக்க முயற்சித்தது குறித்த ஆதாரங்களை வெளியிடத் தயார்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான கருப்பு முருகானந்தம் கடந்த மக்களவைத் தேர்தலில் தஞ்சையில் போட்டியிட்டார். டிடிவி தினகரனின் சொந்த மாவட்டமான திருவாரூரைச் சேர்ந்தவர் இவர்.

மேலும், டிடிவி தினகரனின் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் ஆதாரங்களுடன் உண்மையை வெளியிடத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு குறித்து கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கூறுகையில், “கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் இருக்கிறார் ராதாகிருஷ்ணன். அதனால்தான் குறுக்கு வழியில் பயணிக்க முயற்சிக்கிறார். டிடிவி தினகரனே இப்போது சொல்லிவிட்டார். இனி ராதாகிருஷ்ணன் எப்படி மக்களைச் சந்திக்கப்போகிறார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பார்க்க: குமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த நெருக்கடி: டிடிவி சிறப்புப் பேட்டி





தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: