திட்டமிட்டு வழக்குப்பதிவு; சட்ட ரீதியாக சந்திப்பேன் - கருப்பர் கூட்டம் யுடியூப் சேனல் தொகுப்பாளர் போலீசில் சரண்

கருப்பர் கூட்டம் யுடியூப் சேனலின் தொகுப்பாளர் சுரேந்தர் இன்று போலீசில் சரணடைந்துள்ளார்.

திட்டமிட்டு வழக்குப்பதிவு; சட்ட ரீதியாக சந்திப்பேன் - கருப்பர் கூட்டம் யுடியூப் சேனல் தொகுப்பாளர் போலீசில் சரண்
சுரேந்தர் நடராஜன்
  • News18
  • Last Updated: July 16, 2020, 9:43 PM IST
  • Share this:
கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து, இது தொடர்பாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கில் சம்பந்தப்பட்ட வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன், என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதன் தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்தர் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று மதியம் 3 மணிக்கு புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியில் தமிழக போலீசாரிடம் சரணடைந்தார்.

படிக்க: கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா - வாழ்த்தும் ரசிகர்கள்
படிக்க: BREAKING | தமிழகத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரத்தில் இருந்து தமிழக போலீசார் அவரை கைது செய்து வந்தனர். அப்போது சுரேந்திர் நடராஜன் கூறுகையில், தன்மீது  திட்டமிட்ட அரசியல் சதியால் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். திமுகவிற்கு ஆதராக நான் இருப்பதாக பாஜக கருதி,  திட்டமிட்டு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன் எனவும்  தெரிவித்தார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading