கருப்பர் கூட்டம் யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

கந்த சஷ்டி கவசம் குறித்து யூ-டியூப்பில் அவதூறு வீடியோ வெளியிட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

கருப்பர் கூட்டம் யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
  • Share this:
கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தும், இந்து கடவுள் பற்றியும் விமர்சனங்கள் செய்து வீடியோ வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் அவரவர் இல்லத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க...

வீரப்பனின் மகள் வித்யாவுக்கு பாஜகவில் முக்கியப் பொறுப்பு


சாத்தான்குளம்: 5 காவலர்களும் சிபிஐ விசாரணைக்கு பிறகு இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்

இதன்படி, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கோயம்பேட்டில் உள்ள தனது இல்லம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, இந்து கடவுளை அவமதித்து வீடியோ வெளியிட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று எல்.முருகன் வலியுறுத்தினார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading