சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டவர் முன்ஜாமீன் கோரி மனு

யூடியூபில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட நபர், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டவர் முன்ஜாமீன் கோரி மனு
சென்னை உயர்நீதிமன்றம்.
  • Share this:
"கருப்பர் கூட்டம்" எனும் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட்ட நாத்திகன் என்கிற சுரேந்திரன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சமீபத்தில் தமிழக பாஜக தரப்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் "கருப்பர் கூட்டம்" என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோக்கள், இந்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளதாகவும், முருகக்கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்தும் மிகவும் அருவெருக்கத் தக்க ஆபாசமாக, ஹிந்து மதத்தையும் அதன் கடவுள் முருகரையும் அசிங்கப்படுத்தி மேற்கண்ட சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

மேலும், ஹிந்து மத தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் இதிகாசங்களையும் புராணங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி பதிவு வெளியிடப்பட்டுள்ளதாகவும், மக்களின் மத்தியில் ஒருவித அசாதாரண சூழ்நிலையை இது ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறி, அதனை வெளியிட்ட சுரேந்திரன் நடராஜன் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளிக்கப்பட்டது.


அந்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது சாதி, மத, இன ரீதியான மோதலைத் தூண்டுவது, அவதூறு பரப்புதல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்ட சுரேந்திரன் என்கிற நாத்திகன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Also read: 6 பேருக்கு கொரோனா எதிரொலி - மூடப்பட்ட புதுச்சேரி பெரிய மார்க்கெட்

அவர் மனுவில், கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும் பல்வேறு தகவல்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வெளியிட்ட பதிவு தொடர்பாக 6 மாதத்திற்குப் பிறகு ஜூலை 14 அளித்த புகாரில் தன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், வலதுசாரி சக்திகளுக்கு எதிராகத் தொடர்ந்து பணியாற்றி வருவதால் அதை முடக்கும் நோக்கில் தன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதால், அதில் கைதாவதிலிருந்து தவிர்க்க முன் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading