• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மத உணர்வை தூண்டும் வகையில் பேசவில்லை - 'கறுப்பர் கூட்டம்' சுரேந்திரன் ஜாமின் கோரி மனு

மத உணர்வை தூண்டும் வகையில் பேசவில்லை - 'கறுப்பர் கூட்டம்' சுரேந்திரன் ஜாமின் கோரி மனு

கறுப்பர் கூட்டம்.

கறுப்பர் கூட்டம்.

மத உணர்வை தூண்டும் வகையில் பேசவில்லை என கறுப்பர் கூட்டம் யூடியூப் பக்கத்தின் தொகுப்பாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கறுப்பர் கூட்டம் யூடியூப் பக்கத்தின் தொகுப்பாளர் சுரேந்திரன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் அரசியல் ஆதாயத்திற்காகவும், மலிவான விளம்பரத்திற்காகவும் தன் மீது பாஜக புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கந்த சஷ்டி கவசம் குறித்த தன் பதிவு மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதில் உண்மை இல்லை எனவும், இரு பிரிவுக்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் தான் எந்த கருத்தும் பதிவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    ALSO READ : ’காம்ப்ளான்’ பாக்கெட்டில் இறந்த பல்லி - 7 வயது சிறுவனை மருத்துமனையில் சேர்த்த பெற்றோர்

    மேலும் அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டதாகவும் தனது ஜாமீன் மனுவில் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: