• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கருப்பர் கூட்டம் சேனலின் மற்றொரு நிர்வாகி மீதும் குண்டர் சட்டம்

கருப்பர் கூட்டம் சேனலின் மற்றொரு நிர்வாகி மீதும் குண்டர் சட்டம்

செந்தில்

செந்தில்

கந்தசஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், மற்றொரு நபர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வழியாக, கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக, செந்தில்வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், சுரேந்திரன் மீது ஏற்கனவே ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரையும் ஜுலை 30 வரை காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனிடையே கறுப்பர் கூட்டத்தின் வீடியோக்கள் அனைத்தும் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டன. இந்தநிலையில் தற்போது சுரேந்திரன் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல முகமது நபி குறித்து அவதூறு கருத்தை வெளியிட்ட கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார்.




    படிக்க: இணையத் தாக்குதல்களை நிறுத்துங்கள் - விஜயலட்சுமி விவகாரத்தில் காயத்ரி ரகுராம் காட்டம்

    படிக்க: மீண்டும் விஜய் டிவியின் புதிய சீரியலில் நடிக்கும் ஆல்யா மானசா


    படிக்க: முருகனுக்கு ஒரு நியாயம்? வள்ளிக்கு ஒரு நியாயமா? மதுரை ஆட்சியரிடம் புகார்









    இந்த நிலையில், கருப்பர் கூட்டம் சேனலின் மற்றொரு நிர்வாகியான செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar A
    First published: