நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் இணைந்து செயல்பட்டால் மாபெரும் சக்தியாக உருவாகும் - கருணாஸ்

கருணாஸ் - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் திராவிட கட்சிகளுடன் இணைந்திருந்தால் இந்த அளவுக்கு வாக்குகள் பெற்றிருக்குமா என்பது சந்தேகம்.

  • Share this:
    நாம் தமிழர் கட்சியுடன், மக்கள் நீதி மய்யம் இணைந்து செயல்பட்டால் மாற்றம் ஏற்படும், மாபெரும் சக்தியாக உருவாகும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கூறியுள்ளார்.

    முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனத் தலைவர் கருணாஸ், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பின்னர் அந்த சந்திப்பு குறித்து கருத்து கூறிய கருணாஸ், மக்கள் நீதி மய்யம் தனித்துவமாக இருக்கும் வரைக்கும் அதிக வாக்குகள் வரும். பணம் கொடுக்காமல் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது மக்கள் நீதி மய்யம். கோவை தெற்கில் கமல் வெற்றி பெருவார் என்று பலர் எதிர்பார்த்தார்கள்.

    உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வாக்குகளாக பெருக்கி விரைவில் கட்சி வளரும் என்று வாழ்த்து தெரிவித்தேன். மக்கள் நீதி மய்யம் திராவிட கட்சிகளுடன் இணைந்திருந்தால் இந்த அளவுக்கு வாக்குகள் பெற்றிருக்குமா என்பது சந்தேகம்.

    நாம் தமிழர் கட்சியுடன், மக்கள் நீதி மய்யம் இணைந்து செயல்பட்டால் மாற்றம் ஏற்படும். வரக்கூடிய காலங்களில் நல்ல விஷயங்களை செய்பவர்களுடன் இணைந்து செயல்படுவோம். என்று கூறினார். அப்போது செய்தியாளர்கள் சசிகலா பற்றி கேட்டபோது, “சசிகலா அரசியலுக்கு வந்தால் அப்போது அதுபற்றி கருத்து கூறுகிறேன்” என்று பதிலளித்தார் கருணாஸ்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்தது. கமல்ஹாசன் உட்பட கட்சியின் அனைவரும் தோல்வியடைந்தனர். அதனைத் தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், செயலாளர்கள் உட்பட பலரும் அக்கட்சியை விட்டு விலகினர். மநீம வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் நிர்வாகிகள் என பலரும் அடுத்தடுத்து கட்சியை விட்டு விலகினர். இதனால் கமலஹாசனின் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

    Must Read : தொண்டர்கள் என் பக்கம்... அதிமுக நிர்வாகிகள் பயத்தில் பேசுகிறார்கள் - சசிகலா

    2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று, எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் கருணாஸ். ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலில், முக்குலத்தோர் இனத்துக்கு அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறி அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்.  அதனைத் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். சில தினங்களுக்குப் பின்னர், அந்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தார்.

    இந்நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: