சசிகலாவைச் சந்திக்க நேரம் கேட்ட கருணாஸ்: நாளை சந்திக்க வாய்ப்பு

கருணாஸ் எம்.எல்.ஏ

சசிகலாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு காலம் சிறைதண்டனை அனுபவித்து வந்த சசிகலா, கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், கொரோனா பாதிப்பின் காரணமாக பெங்களூருவிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதால், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூருவிலுள்ள பங்களாவில் ஓய்வுவெடுத்துவந்தார். நேற்று, பெங்களூருவிலிருந்து புறப்பட்டு இன்று காலை சென்னை வந்தடைந்தார்.

  சசிகலாவின் வருகையைத் தொடர்ந்து, அ.தி.மு.கவிலுள்ள நிர்வாகிகள் பலர் சசிகலா ஆதரவாக போஸ்டர் ஓட்டி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல, அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தில் தேர்தல் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருக்கும் கருணாஸ் ஆரம்பம் முதலே சசிகலாவுக்கு ஆதரவாக பேசிவருகிறார்.

  இந்தநிலையில், ‘சசிகலாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், விரைவில் அவரைச் சந்திக்கவுள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். நாளை சசிகலாவைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: