Home /News /tamil-nadu /

இனத்துரோகி அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் - கருணாஸ் காட்டமான கடிதம்

இனத்துரோகி அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் - கருணாஸ் காட்டமான கடிதம்

கருணாஸ்

கருணாஸ்

Karunas | ADMK | இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை.

    இனத்துரோகி அ.தி.மு.கவைத் தோற்கடிக்க வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ‘நடைபெறவிருக்கின்ற 2022 நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இனத் துரோகத்தின் அடையாளமாகவும், நம்பிக்கைத் துரோகத்தின் உச்சமாகவும் இருக்கின்ற அ.தி.மு.க அரசியல் அனாதையாக வேண்டும். அதேசமயம், இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.கவிற்கு மக்கள் தக்கப் பாடம் புகுத்த வேண்டும் என்பதே முக்குலத்தோர் புலிப்படையின் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நிலைப்பாடாகும்.

    இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை. மாறாக நகர்புற உள்ளாட்சித் தொகுதிகளிலும் முக்குலத்தோர்களிடம் நமது கோரிகை, அ.தி.மு.க எதிர்ப்பு உள்ளிட்டவரை குறித்து சமூக வலைதளங்கள், ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல தலைமை வலியுறுத்துகிறது. அ.தி.மு.கவை தோற்கடிக்க அந்தந்த தொகுதிகளில் களநிலவரத்துக்கு ஏற்றவாறு நிர்வாகிகள் பணியாற்ற வேண்டுமென்றும் தலைமை அறிவுறுத்துகிறது.

    அ.தி.மு.க கடந்த ஆட்சியில் பா.ஜ.கவோடு இணைந்து தமிழ்நாட்டுக்கு செய்த துரோகங்கள், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, இடஒதுக்கீடு, விவசாய உரிமைகள், காவிர பிரச்னை, மேக்கேத்தாட்டு அணை விவகாரம் இப்படி பல இவை அனைத்தும் பா.ஜ.கவின் துணையோடு தமிழர்களுக்கு இழைத்த துரோகங்கள்.

    தமிழர்களுக்கான உரிமைகளை கேட்டு பா.ஜ.கவிடம் நாம் மூக்கை நுழைத்தால் பா.ஜ.க கொள்ளையடித்துக் கொண்டிருப்பதைத் தடுக்கும். நம் மீது வழக்குகள் பாயும் என்பதால கைக் கட்டி வாய்பொத்தி அடிமைச் சேவகம் செய்தது அ.தி.மு.க. அ.தி.மு.கவிலிருந்து அம்மாவும், சின்னம்மாவும் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். அவர்கள் நம்பிக்கைப்படி நான் வெற்றி பெற்றேன்.

    அதன் பிறகு எல்லாமே மாறிப்போனது. அம்மா இறந்தார். சின்னம்மா சிறை சென்றார். ஆனால், அவர்கள் வழியில் ஆட்சி செய்ததாக சொன்ன எடப்பாடி என் போன்றோர்க்கு நம்பிக்கை துரோகம் செய்தார். ஆகவே, இனத்துரோகம் - நம்பிக்கைத் துரோகம் - இரண்டையும் தமது கொள்கையாக வைத்துக் கொண்டு இன்னமும் மக்களை ஏமாற்றத் துடிக்கும் அ.தி.மு.க இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தோற்க வேண்டும். அதற்கு மக்கள் வாக்களிக்காது பாடம் புகுத்த வேண்டும்.

    எங்களது கோரிக்கைகள்:

    ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்த சீர்மரபினர் கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் உடனடியாக நடத்திக்கோரி 68 சமுதாய மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டுமென்று 2020-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தேன். தற்போதைய அரசு உடனடியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும்.

    நாடாளுமன்றத்தில் மோடியை போல் அவமானப்பட்டவர்கள் வேறு யாரும் இல்லை- கே.எஸ்.அழகிரி விமர்சனம்





    வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு வழங்கியதை போல சீர்மரபினரிலுள்ள மீதமுள்ள சமுதாயத்தினருக்கும் வழங்கவேண்டும். சீர் மரபினர் மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அவர்களை மீண்டும் பழையபடி சீர்மரபினர் பழங்குடியினர் என ஒரே பெயரில் அழைக்கப் புதிய அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK, Karunas, Local Body Election 2022

    அடுத்த செய்தி