• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது முக்குலத்தோர் புலிப்படை - கருணாஸ் காரசார பேட்டி

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது முக்குலத்தோர் புலிப்படை - கருணாஸ் காரசார பேட்டி

கருணாஸ் எம்.எல்.ஏ

கருணாஸ் எம்.எல்.ஏ

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை நடத்தி வரும் கருணாஸ் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவ்வப்போது முதல்வர் மற்றும் ஆட்சியின் குறைகளை சுட்டிக் காட்டி வந்த அவர் கடைசி வரை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.

சசிகலாவின் ஆதரவாளராக வலம் வந்த கருணாஸ் இந்த முறை என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து தனது முடிவை அறிவித்தார். அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, “தமிழகத்தில் சாதி, மத வாரியாக கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் 19 முறை 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளேன். அதில் சில கோரிக்கையாவது நிறைவேறும் என நம்பி இருந்தேன். மத்திய, மாநில அரசுகள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக நம்பிக்கை மோசம் செய்து கழுத்தை அறுத்து மோசடி செய்துள்ளது.

முக்குலத்தோர் மக்களின் அடிப்படை உரிமையான இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக நீண்டகாலமாக போராடி வருகிறோம் என்று கோரிக்கைகள் தொடர்ந்து புறந்தள்ளப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி எங்களது கோரிக்கைகளை புறந்தள்ளியுள்ளார். இதற்கு எங்கள் சமூகத்தைச் சேர்ந்த எட்டு அமைச்சர்களும் துணை போயிருக்கின்றனர்.

அரசியல் ஆதாயத்திற்காக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அவசர அவசரமாக வழங்கப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாகவும் அவசர சட்டப்பேரவை கூடிய தொடர்பாகவும் தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல கொற்றப்பரம்பரை. இந்த சமுதாயத்தை அரசியல் அனாதையாக முயற்சிக்கிறார்கள்.

எனவே அதிமுக கூட்டணியிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி வெளியேறுகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்கள் சமுதாயம் 184 தொகுதிகளில் இருக்கிறார்கள். அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். பதிலடி கொடுப்பார்கள். நானே களத்தில் இறங்கி இளைஞர்களை ஒருங்கிணைத்து அதிமுகவிற்கு எதிராக பிரசாரம் செய்வேன்.

வெளியே வருவதாகவும் வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்கள் சமுதாயம் 84 தொகுதிகளில் இருக்கிறார்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் பதிலடி அளிப்பார்கள் நானே களத்தில் இறங்கி இளைஞர்களை ஒருங்கிணைத்து அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்த துரோகத்தை எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்வோம்.” இவ்வாறு கருணாஸ் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: