பேச அனுமதிக்கவில்லை - சபாநாயகரின் செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது: கருணாஸ்

பேச அனுமதிக்கவில்லை - சபாநாயகரின் செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது: கருணாஸ்
கருணாஸ்
  • Share this:
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதி கொடுக்காதது ஜனநாயகதிற்கு எதிரானது என முக்குலத்தோர் புலிப்படை கட்சித்தலைவர் கருணாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சபாநாயகரிடம் மக்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரியதாகவும், அதற்கு இதுவரை சபாநாயகர் அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


மேலும் பேசிய அவர், வேலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாலிபரை கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் குறித்தும் இதேபோல் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் பேச அனுமதி கேட்டும் இதுவரை அனுமதிக்கப் படவில்லை; சபாநாயகரின் செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தெரிவித்தார்..

இதையும் பாருங்க:

First published: July 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்