MK Stalin : அயராத உழைப்பிற்கு உயர்வான வெற்றி... முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் வாழ்த்து

MK Stalin : அயராத உழைப்பிற்கு உயர்வான வெற்றி... முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் வாழ்த்து

கருணாஸ்-மு.க.ஸ்டாலின்

பத்தாண்டுகளுக்குப் பிறகு புத்தாண்டு மகிழ்வுபோல் பெருவெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என முக்குலத்தோர் புலிப்படை கட்சித்தலைவரும் நடிகருமான சேது. கருணாஸ் கூறியுள்ளார்.

  • Share this:
    இது குறித்து கருணாஸ் கூறியுள்ள வழ்த்து செய்தியில், “பத்தாண்டுகளுக்குப் பிறகு புத்தாண்டு மகிழ்வுபோல் ஓர் மகத்தான பெரும் வெற்றியை பெற்று திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து ஆட்சி அமைக்கிறது. அயராத உழைப்பிற்கு உயர்வான வெற்றியை அறுவடைசெய்திருக்கிறார். தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.

    தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கும் திமுக தலைவர் மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நான் சார்ந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா காலத்தில் ஓர் இக்கட்டான சூழலில் சிக்கித்தவிக்கும் தமிழகத்திற்கு நோய்போக்கும் மருந்தாய் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது வெற்றி அமைந்திருந்திருக்கிறது.

    கொரோனா பெருந்தொற்று, கடும் பொருளாதார நெருக்கடி, பறிபோன தமிழக உரிமைகள் என பல்வேறு இடர்பாடுகளோடு இருந்த தமிழ்நாட்டை இனி புதிய வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் தளபதி மு.க.ஸ்டாலின் என்று நாங்கள் நம்புகிறோம்!

    மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் வழியில் தமிழின் மேன்மைக்கும், தமிழரின் உரிமைக்கும் புதிய முதல்வராக பொறுப்பேற்கும் தளபதி மு.க.ஸ்டாலின் பாடுபடவேண்டும். உங்களது நிர்வாகத் திறனையும், ஆற்றமிகு உழைப்பையும் நாங்கள் ஏற்கெனவே கண்டு வியந்திருக்கிறோம். ஆகவே மீண்டும் தமிழகத்தில் புதிய விடியலை உருவாக்கிட நீங்கள் பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Must Read :  வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 300 டன் கொரோனா நிவாரண பொருட்கள் : 5 நாட்களில் 25 விமானங்கள்

     

    தமிழகத்தின் முதலமைச்சராக வரும் 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: