• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம்: அரசாணை வெளியீடு

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம்: அரசாணை வெளியீடு

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  • Share this:
    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் பேரவையில் அறிவித்தார்.

    தொடர்ந்து, நினைவிடம் அமைப்பதற்கான தீர்மானமும் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து, நினைவிடத்திற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் நிலையில் இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார். இது குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அது நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு கருணாநிதி நினைவிடப்பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ 39 கோடி செலவில் சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறையினர் தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமும் அனுமதி அனுமதியளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, கருணாநிதி நினைவிடப்பணிகள் தொடர்பாக ஒப்பந்த புள்ளி கோரப்படவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: