முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதி படம் திறப்பு

இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதி படம் திறப்பு

கருணாநிதி

கருணாநிதி

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதி உருவ படத்தை திறந்கு வைக்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படம் திறப்பு விழாவும் இன்று மாலை நடைபெறவுள்ளது. சட்டசபையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படம் திறப்பு விழா இன்று மாலை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, இன்று பகல் 12:45 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று தங்குகிறார். அங்கேயே மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில், தமிழக சட்டசபை மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி உருவ படத்தை திறந்கு வைக்கிறார். குடியரசுத் தலைவரை சபாநாயகர் அப்பாவு வரவேற்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்த உள்ளார். முன்னதாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பேசுகின்றனர்.

தலைமைச் செயலகம்

கலைஞர் என்று அன்போடு அழைக்கப்படும் மு. கருணாநிதி, 1969-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்றார். அத்துடன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார். பின்னர், 1971, 1989, 1996, மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதிவியேற்று பதவி வகித்தார். இந்நிலையில், வயோதிகம் காரணமாக 2018 ஆகஸ்ட் 7 ஆம் நாள், தனது 94ஆவது வயதில் காலமானார் மு. கருணாநிதி.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.பி.,க்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்த விழா, ஒரு மணி நேரம் நடக்கவுள்ளது. விழா முடிந்ததும், மீண்டும் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் செல்லும் குடியரசுத் தலைவர், இரவு அங்கேயே தங்குகிறார். நாளை காலை, சென்னையில் இருந்து கோவை வழியாக ஊட்டிக்கு செல்கிறார்.

மு.க.ஸ்டாலின் - ராம்நாத் கோவிந்த்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலக வளாகம், கமாண்டோ படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று பணிக்கு வரும் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Must Read : Karunanidhi - சமூக நீதியை நிலை நிறுத்த அரசு திட்டங்களை முன்னெடுத்த கருணாநிதி

சட்டமன்ற நுாற்றாண்டு விழாவை ஒட்டி, சட்டசபை மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலக நுழைவாயில் மற்றும் வெளியேறும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. வாழை மரங்கள், அலங்காரம், மின் விளக்கு அலங்காரம் என சட்டமன்ற வளாகம் விழாக்கோலம் பூண்டு வருகிறது.

First published:

Tags: Assembly, DMK Karunanidhi, MK Stalin, President Ramnath Govind