Home /News /tamil-nadu /

கலைஞர் கருணாநிதி திரையில் நடத்திய சொல் வீச்சு!

கலைஞர் கருணாநிதி திரையில் நடத்திய சொல் வீச்சு!

கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி

கருணாநிதி படைத்த திரைப்பட படைப்புகளில் பூம்புகார் மறக்க முடியாத ஒன்றானது.

    சமூக நீதி அரசியலை முன்னிறுத்தி திரையில் கருணாநிதியின் சொல் வீச்சு குறித்து ஒரு சிறப்பு தொகுப்பு. 

    கருணாநிதியின் பேனா திரையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய முதல் திரைப்படம் ’ மந்திரிகுமாரி’. ”போன்னா போறே, வான்னா வாறே, மந்திரி பதவி வந்ததும் தெரியலை, போனதும் தெரியலை’’ என்ற வசனமும் “இவன்தான் திருடன்,,.. அந்தணர் வம்சத்து அருட்பெருஞ்ஜோதி. போலி குருநாதரின் மகன்” என்ற வசனமும் அன்றைய தமிழ் சினிமா மரபுக்கு முற்றிலும் புதிதாக இருந்து சினிமா உலகை ஆச்சரியப் பட வைத்தது..

    கருணாநிதி வசனம் எழுதிய ‘மருதநாட்டு இளவரசி’ என்ற சரித்திரப் படத்திலும் சமூக உணர்வே மேலோங்கி இருந்தது. பலிபீடத்தின் முன்னே காண்டீபனாகிய எம்ஜிஆர் பேசும் வசனம்....

    6 சீரியல்களில் நடித்து இருக்கும் பிரபல நடிகர்.. யாருன்னு கெஸ் பண்ண முடியுதா?

    ’நாம்’ திரைப்படத்தில் ஒரு பண்ணையார் தொழிலாளியிடம், "என்னடா ஆச்சரியக் குறி போடுகிறாய்?" என்று கேட்க, "ஆச்சரியக்குறி தான் ஜமீன்தார் அவர்களே.. கொஞ்சம் வளைந்தால் அதுவே கேள்விக்குறியாக மாறிவிடும். ஞாபகம் இருக்கட்டும்! அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசம் இல்லை" என தொழிலாளி பதில் சொல்வது என வெள்ளித்திரையிலும் சொல் வீச்சு நடத்தினார் கருணாநிதி.

    கருணாநிதியின் கை வண்ணத்தில் பராசக்தி திரைப்படத்தில் . சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர். என்ற இரு இளைஞர்கள் பேசிய வசனங்கள் காப்பியத்தின் பக்கங்களாகின. "கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது" என்ற வசனமும் "அடேய் பூசாரி.. அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?" என்றும் கதாபாத்திரங்களின் பெயரிலிருந்து அவை பேசும் வசனங்கள் வரை அனைத்திலும் அரசியலை வெளிப்படுத்தினார். கருணாநிதி.



    கருணாநிதி படைத்த திரைப்பட படைப்புகளில் பூம்புகார் மறக்க முடியாத ஒன்றானது. சிலப்பதிகார காவியத்தை ரசிகர்களின் கண் முன்னே திரை கதாபாத்திரங்களாக நடமாட விட்டிருந்தார் இவர்.

    எஸ்.எஸ்.ராஜேந்திரன் கோவலனாகவும் விஜயகுமாரி கண்ணகியாகவும் நடித்திருந்த இத்திரைப்படத்தில் தன் வசனங்களால் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார் கருணாநிதி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: DMK Karunanidhi, DMK leader Karunanidhi, MK Stalin

    அடுத்த செய்தி