கருணாநிதி பிறந்தநாள் - திருக்குவளை வீட்டில் நிவாரண உதவிகள் வழங்கிய திமுகவினர்

திருக்குவளையில் நிவாரணப் பொருட்கள் வழங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை திமுக-வினர் கொண்டாடி வருகின்றனர்.

திருக்குவளையில் நிவாரணப் பொருட்கள் வழங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை திமுக-வினர் கொண்டாடி வருகின்றனர்.

  • Share this:
திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர்.

கருணாநிதி பிறந்த இல்லமான நாகை மாவட்டம் திருக்குவளையில் அவரது 97வது பிறந்தநாள் விழாவினை திமுகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். கலைஞர் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் மதிவாணன், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் கெளதமன் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிய திமுகவினர், அப்பகுதியைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியவசிய நிவாரணப் பொருட்களை வழங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், மேகநாதன் மற்றும் ஒன்றிய திமுக செயலாளர்கள் கோவிந்தராஜன், தாமஸ் ஆல்வா எடிசன், திருக்குவளை ஊராட்சிமன்றத் தலைவர் பழனியப்பன், நாகை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் மனோகரன், வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய சார்லஸ், நாகை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
Published by:Rizwan
First published: