Home /News /tamil-nadu /

கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு: பாஜக வரவேற்பு... அதிமுக அமைதி

கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு: பாஜக வரவேற்பு... அதிமுக அமைதி

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

வாஜ்பாய் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர் என்றும், அனைத்து கமலாலயத் தலைவர்களோடும் கூட்டணி வைத்து, காங்கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டு காலம் நடத்த உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி என்றும் பாஜகவின் வானதி சீனிவாசன் பேசினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தார்.

கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் ஓமந்தூரார் அரசின் தோட்டத்தில் சிலை அமைக்கப்படும் என்றஅறிவிப்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு குறித்த பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன், வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி வேலைவாய்ப்பு உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி என்றும், அவர் பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதியை அரசு விழாவாக கொண்டாவதை தமிழக வாழ்வரிமை கட்சி வரவேற்பதாக தெரிவித்தார்.

மேலும், கருணாநிதி பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதை வரவேற்றதோடு, அனைத்து மாவட்டங்களிலும் கருணாநிதி சிலை வைக்கப்படவேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியகட்சி ஈஸ்வரன் வலியுறுத்தினார். இதே போல பேசிய மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் அகமது வஹாப், தமிழகம் அமைதி பூங்காவா இருக்க விதை போட்டவர் கருணாநிதி தான் என்றார்.

இதையும் படிங்க: கருணாநிதி பிறந்த நாள் இனி அரசு விழா.. ஓமந்தூரார் மருத்துவமனையில் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


கருணாநிதி பெருமை எல்லா துறையிலும் இருக்கிறது என்றும் மாவட்ட தோறும் சிலை வைக்கவேண்டும் என்று முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை மதிமுக உறுப்பினர் சின்னப்பா வரவேற்றார். அடிதட்டு மக்களின் வாழ்வை தலைதூக்க செய்வர் என்றும்,எவ்வித அணியையும் ஜனநாயப்படுத்தியவர் தான் கருணாநிதி தான் என்று சிபிஐ உறுப்பினர் மாரிமுத்து தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து பேசிய சிபிஎம் நாகைமாலி, தமிழ்நாட்டில் அரசியல் செய்தாலும் யார் பிரதமராக வரவேண்டும், ஜனாதிபதியாக வரவேண்டும் என்று இருந்த இடத்திலேயே ரிமோட் மூலம் இயக்கியவர் கருணாநிதி என்றார்.

திருவள்ளுவனை தமிழ் சமுகம் நினைப்பது போல கருணாநிதி நினைவில் இருப்பார் என்றும் தமிழர்களை தலைநிமிர்த்திவராகவும், பன்முகை தன்மை கொண்டவர் என்று விசிக உறுப்பினர் சிந்தனைச்செல்வன் புகழாரம் சூட்டினார்.

வாஜ்பாய்க்கு உறுதுணையாக இருந்தவர்

வாஜ்பாய் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர் என்றும், அனைத்து கமலாலயத் தலைவர்களோடும் கூட்டணி வைத்து, காங்கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டு காலம் நடத்த உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி என்று தெரிவித்த பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், அரசியல் மாண்பின் வழியாக இந்த அறிவிப்பை வரவேற்கிறோம் என்றார்.

மேலும் படிக்க: முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம்: வேல்முருகன் கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்


மக்கள் உரிமைக்காக போராடிய போராளியாவும், கூட்டணியில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான்  என்று ராமதாஸ் கூறுவார் என்று பாமக உறுப்பினர் ஜி.கே.மணி தெரிவித்தார். மேலும், உலக முழுவதும் உள்ள தமிழர்கள் கருணாநிதியை அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படவேண்டும் என்றும் ஜி.கே.மணி கூறினார்.

கருணாநிதிக்கு வைக்கப்போகும் சிலை தமிழர்களின் அடையாளமாக  இருக்கபோகிறது என்றும், இந்த நாட்டில் அஸ்தமிக்காத சூரியனாக கருணாநிதி  மட்டும் தான் இருக்கிறார் என்றார். மேலும், தமிழகத்தின் பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீசாக அவர் வாழ்ந்துள்ளதாவும் செல்வபெருந்தகை தெரிவித்தார்.

இன்றைய தினம் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய உணர்ச்சிகரமான அறிவிப்பு என்றும் பன்முக பரிமாணம் கொண்டவர் கருணாநிதி என்று அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும், எந்த துறையை தொட்டாலும் முதலமைச்சராக இருப்பார். அதோடு, மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தாலும் இந்திய துணைக்கண்டத்தின் தலைவிதியை நிர்ணயிக்ககூடியவராக கருணாநிதி இருந்தார் என்று அவை முன்னவர் துரைமுருகன் புகழாரம் சூட்டினார்.

சுயமரியாதையில தெளிவாக இருந்தவர் என்றும், பாஜகவுடன், மதவாதிகளுடன், ஆன்மிக வாதிகளுடன் பழகி இருக்கார். மேலும், மார்க்சிஸ்ட்டுடனும் பழகியவர் கருணாநிதி. தமிழை செம்மொழியாக்கிவர், மனிதபிமானம் கொண்டவராகவும் விளங்கினார்  என்றார்.

தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் கருணாநிதி தான். தொண்டன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் கருணாநிதி தான் என்றும் அவைமுன்னவர் துரைமுருகன் தெரிவித்தார்.

ஏழை எளிய மக்கள் தலைநிமிர்ந்து நிற்க காரணம் கருணாநிதி தான் என்றும், தாய் மொழி உணர்வை கற்றுத்தந்தவர் கருணாநிதிதான் என்று சபாநாயகர் தெரிவித்தார். தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் கருணாநிதி தான் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்பதற்கு அதிமுகவில் இருந்து யாரும் பேசவில்லை.
Published by:Murugesh M
First published:

Tags: BJP, TN Assembly, Vanathi srinivasan

அடுத்த செய்தி