முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ''ஸ்டாலினைவிட ஆபத்தானவர் உதயநிதி'' - கரு.பழனியப்பன் அதிரடி

''ஸ்டாலினைவிட ஆபத்தானவர் உதயநிதி'' - கரு.பழனியப்பன் அதிரடி

ஸ்டாலின் - உதயநிதி - கரு.பழனியப்பன்

ஸ்டாலின் - உதயநிதி - கரு.பழனியப்பன்

’கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துகள் சின்னவரே' என இயக்குநரும் நடிகருமான கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றிக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கதறியவர்களுக்கு தெரியும், உதயநிதி ஸ்டாலினை விட ஆபத்தானவர் என்று. கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துகள் சின்னவரே'' என்று குறிப்பிட்டு உதயநிதிக்கு ஸ்டாலின் முத்தமிடும் படத்தைப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ''வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்ற விமர்சனம் வரும் என்று தெரியும். என்னுடைய உழைப்பின் மூலம் மட்டுமே விமர்சனங்களுக்கு பதிலளிப்பேன்.

தமிழ்நாட்டை விளையாட்டுத்துறையின் தலைநகராக மாற்றுவதே இலக்கு என்று தெரிவித்தார்.  மாமன்னன் தான் தனது கடைசி படம். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்'' என்று  தெரிவித்திருந்தார். மேலும் கமல் தயாரிப்பில் தான் நடிக்கவிருந்த படத்தில் விலகிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

First published:

Tags: Director Karu.Palaniappan, Udhayanidhi Stalin, Udhayanithi Satlin